திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1371 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1371பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும்) 4
வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த தீம் பலங்கனி தேனது நுகர் திரு வெள்ளறை நின்றானே –5-3-4
பதவுரை Show / Hide
மாம்பொழில் தளிர் கோதிய மட குயில், Maampozhil Thalir Kothiya Mada Kuyil - மாந்தோப்புகளிலே அவற்றின் தளிர்களை கொத்தி உண்ட அழகிய குயில்கள் (- (திருவெள்ளறையில் நின்றானே!;))
வாய் அது துவர்ப்பு எய்த, Vaai Adhu Thuvarppu Eytha - தமது வாய் துவர்த்துப்போக (அந்த ரஸத்தை மாற்றுகைக்காக)
தீம் பலங்கனி தேன் அது நுகர், Theem Palangani Then Adhu Nukar - இனிமையான பலாப் பழங்களிலுள்ள மதுவைப் பானம் பண்ணப் பெற்ற
வாம் பரி, Vaam Pari - (பாரதப்போர்ச் சேனைகளிலே) மேல்விழுந்து வருகிற குதிரைகள்
உக மன்னர்தம் உயிர் செக, Uga Mannartham Uyir Sek - மாளும்படியாகவும் (எதிரிகளான) அரசர்களினுடைய பிராணன் அழியும்படியாகவும் செய்து
ஐவர்கட்கு அரசு அளித்த, Aivar Kadhku Arasu Alitha - பஞ்சபாண்டவர்களுக்கு ராஜ்யத்தை உபகரித்தருளிவனும்,
காம்பின் ஆர் திருவேங்கடம் பொருப்ப, Kaampin Ar Thiruvaengadam Poruppa - மூங்கில்களாலே நிறைந்த திருவேங்கடமலையில் உள்ளவனமான பெருமானே!
நின் காதலை எனக்கு அருள், Nin Kaadhalai Enakku Arul - உன் விஷயமான பரம பக்தியை அடியேனுக்குப் பிறப்பித் தருளவேணும்.