திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1372 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1372பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பூமிப் பிராட்டி தன் விபூதி முகத்தாலே புக்கு அழுந்த –பிரளயத்தில் அகப்பட நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத ஸ்ரீ வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனே – அர்த்திக்கவும் மாட்டாதே பூமியை ரஷித்த உனக்கு அர்த்தித்த என்னுடைய ரஷணம் பண்ணுகை பெரிய பணியோ) 5
மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில் ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற தேனின் வாய் மலர் முருகு குக்கும் திரு வெள்ளறை நின்றானே –5-3-5
பதவுரை Show / Hide
கரும்பு கழை ஏறி, Karumbu Kazhai Eri - கரும்பு நுனியளவும் சென்று படர்ந்து (- (திருவெள்ளறையில் நின்றானே!;))
வெண் முறுவல் செய்து அலர்கின்ற, Ven Muruvai Seidhu Alarkindra - வெண்மையான புன்சிரிப்பைச் செய்வனபோல் விகஸியா நின்ற
மா கானம் முல்லை மலர், Maa Kaanam Mullai Malar - பெரிய காட்டு முல்லைப் பூக்கள்
தேனின் வாய் முருகு உகுக்கும், Thenin Vaai Murugu Ukukkum - வண்டுகளில் வாய்களிலே தேனைப் பெருக்காநிற்கப்பெற்ற
மானம் வேல் ஒண் கண், Maanam Veel On Kan - பெருமை தங்கிய வேற்படை போன்ற அழகிய கண்களையுடையளாய்
மடவரல், Madavarl - பெண்டிர்க்குரிய குணங்களையுடையளான
மண்மகள், Manmakal - பூமிப் பிராட்டி
அழுங்க, Azhunga - (பிரளயக் கடலில்) மூழ்கிக்கிடக்க,
அன்று, Andru - அக்காலத்து,
முந்நீர், Munnir - (அந்த பிரளயக்) கடலினுடைய
பரப்பில், Parappil - மஹாஜலத்திலே
ஏனம் ஆகி, Enam Aagi - மஹாவராஹ ரூபியாக (இழிந்து)
இருநிலம் இடந்தவனே, Irunilam Idanthavane - விசாலமான பூமியை அண்டபித்தியில் நின்றும் குத்தியெடுத்து வந்தவனே!
எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - அடியேன்மீது கிருபை பண்ணாய்.