திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1377 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1377பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசந்நிஹிதனே யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து வடிவழகு – அழகு இல்லை யாகிலும் விட ஒண்ணாதது ஆய்த்து பிராப்தி – பிராப்தி இல்லை யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து போக்யதை – இப்பத்தையும் ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை ஸ்ரீ நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு இவர்களை ஆதரியா நிற்பர்கள்) 10
மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும் எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –5-3-10
பதவுரை Show / Hide
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ், Manju Ulaam Mani Maadangal Soozh - மேகங்கள் படிந்து உலாவப்பெற்ற நவரத்நங்கள் பதித்த மாளிகைகளினால் சூழப்பட்ட
திருவெள்ளறை அதன் மேய, Thiruvellarai Adan Meyya - திருவெள்ளறையில் நித்ய வாஸம் செய்பவனும்
அஞ்சனம் புரையும் திரு உருவனை, Anjanam Puraiyum Thiru Uruvanei - மை போன்ற திவ்யமான வடிவையுடையவனும்
ஆதியை, Aadhiye - ஸகல ஜகத்காரண பூதனும்
அமுதத்தை, Amudhatthai - அமுதம்போல் போக்யனுமான எம்பெருமானை,
நஞ்சு உலாவிய வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும், Nanju Ulaaviya Vel Valavan Kalikanri Sol Aiy Irandum - விஷம்தங்கிய வேற்படையைச் செலுத்தவல்லவரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இப்பத்துப் பாசுரங்களைக் கொண்டு
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார், Enjal Inri Nindru Aetha Vallar - குறைவின்றி மனம் நிலைபெற்று துதிக்க வல்லவர்கள்
இமையோர்க்கு அரசு ஆவர்கள் –, Imaiyorkku Arasu Aavargal - நித்யஸூரிகளுக்கும் ஆதரிக்கத் தக்கவராவலர்கள்