திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1379 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1379பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடையனாய் இருக்கிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன் விடாதே வர்த்திக்கிற தேசம்) 2
வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப் பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் என்பரால் தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச் செய்ய சந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே –5-4-2
பதவுரை Show / Hide
நல் தையலார் குழல் மாலையும், Nal Thaiyalar Kuzhal Maalayum - நல்ல ஸ்த்ரீகளினுடைய தலையிலணிந்த பூமாலைகளும்
மற்று அவர் தடமுலை செய்ய சாந்தும், Mattru Avar Thadamulai Seyya Santhum - இன்னமும் அந்த ஸ்த்ரீகளினுடைய முலைத்தடங்களில் (பூசப்பட்ட) சிவந்த சந்தனமும் (ஆகிய இவற்றோடு)
கலந்து இழி புனல் சூழ், Kalandhu Izhi Punal Soozh - சேர்ந்து கலங்கிப் பிரவஹிக்கின்ற (காவிரித்) தீர்த்தத்தினால் சூழப்பட்ட
தென் அரங்கம், Then Arangam - திருவரங்கம்,
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன், Vaiyam Undu Aal Ilai Maevum Maayan - (பிரளயத்தில்) பூமியை யெல்லாம் அமுது செய்து ஆலந்தளிரிலே பொருந்திக் கண்வளர்கின்ற ஆச்சர்ய சக்தியுக்தனும்,
மணி நீள் முடி, Mani Neel Mudi - மணிமயமான நீண்ட கிரீடமணிந்தவனும்
பை கொள் நாகத்து அணையான், Pai Kol Naagathu Anaiyaan - படங்கொண்ட திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனுமான பெருமான்
பயிலும் இடம் என்பர், Payilum Idam Enbar - நித்யவாஸம் பண்ணுகிற இடமென்று சொல்லுவர்