திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1383 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1383பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முலை உண்ணா விடில் தரியாதானாய் அவள் உயிரை முடித்தவன் இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்) 6
கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழும் இடம் என்பரால் குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன் அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-6
பதவுரை Show / Hide
குலை எடுத்த கதலி பொழில் ஊடும் வந்து, Kulai Eduththa Kathali Pozhil Oodum Vandu - குலைகள் ஓங்கியிருக்கப் பெற்ற வாழைத்தோப்பு களினுள்ளே புகுந்து (- (அம்மரங்களை வேரோடே பறித்துக்கொண்டு) (தென் அரங்கம்;))
முன் உந்தி அலை எடுக்கும் புனல் காவிரி சூழ், Mun Undhi Alai Edukkum Punal Kaaviri Soozh - முன்னே தள்ளி அலைவீசியடியாநின்ற தீர்த்தத்தையுடைத்தான காவேரியினால் சூழப்பட்ட
கலை உடுத்த அகல் அல்குல் தாய் என, Kalai Uduththa Akal Alkul Thaai Enna - பட்டாடையணிந்த அகன்ற நிதம்பத்தையுடையளான தாயாகிய யசோதைபோல (வந்து)
முலை கொடுத்தாள் வன் பேய்மகள், Mulai Koduththaal Van Paeymakal - முலையுண்ணக் கொடுத்தவளான வலிய (பூதனையென்னும்) பேய்ச்சியினுடைய
உயிர் உண்டவன் வாழ்இடம் என்பர், Uyir Undavan Vazh Idam Enbar - பிராணனை உறிஞ்சி உண்ட கண்ணபிரான் வாழும் திவ்யதேசம் என்று சொல்லுவர்