திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1387 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1387பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உந்தி – வையம் -இரண்டும் ஸ்ரீ உலகுண்ட ஸ்ரீ வடதள சாயி விஷயம் விளைத்த -வம்பு -ஸ்ரீ ராமன் விஷயம் கலை -கஞ்சன் -ஸ்ரீ கிருஷ்ண விஷயம் சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்–இப்படி நாலு இரண்டும் பண்டு -ஸ்ரீ திருக் குறளன் விஷயம் ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்–இப்படி இரண்டும்-இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள் ஸ்ரீ கோயிலிலே இருந்து அனுபவித்து பின்னை சரீர சமனந்தரம் ஸ்ரீ பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள்) 10
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக் கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல் நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன் வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10
பதவுரை Show / Hide
அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை, Alli Maathar Amarum Thirumaarvan Arangaththai - பூவிற் பிறந்த பெரியபிராட்டியா பொருந்தி வாழப்பெற்ற திருமார்வையுடையனான ஸர்வேச்வரனுடைய திருவரங்கம் விஷயமாக,
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலிகன்றி, Kallin Mannu Mathil Mangaiyar Kon Kalikanri - கல்லாலே கட்டப்பட்ட திடமாயிக்கிற  மதிளையுடைத்தான திருமங்கை நகரில் உள்ளவர்களுக்கு தலைவரான ஆழ்வார்
சொல் நல் இசை மாலைகள், Sol Nal Isai Maalaigal - அருளிச்செய்த நல்ல இசையோடு கூடின சொல் மாலையாகிய
நாலிரண்டும் இரண்டும், Naalirandum Irandum - இப்பத்துப்பாட்டுக்களையும்
உடன் வல்லவர்தாம், Udan Vallarvartaam - கருத்தோடுகூட ஓதவல்லவர்கள்
உலகு ஆண்டு, Ulaku Aandu - இவ்வுலகில் (கோயில் வாழ்ச்சியை) அநுபவித்து
பின் வான் உலகு ஆள்வர், Pin Vaan Ulaku Aalvar - பரமபதாநுபவத்தைப் பெறக்கடவர்.