திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1388 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1388பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெருமாள் உடைய இங்குத்தை வரவாறே பிடித்து ஆற்றாமைக்கு உடலாம்படி காணும் பிறந்த ப்ராவண்ய அதிசயம் – ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் -அன்று நேர்ந்த நிசாசரரை -என்று ராவண வதம் தொடங்கி ஸ்ரீ பெருமாளை அடி ஒத்தினார் –அது தெற்கு திரு வாசலாலே புகுந்து கிடந்தது – மந்தி பாய் -என்று ஸ்ரீ பரம பதமே தொடங்கி அடி ஒத்தினார் –ஸ்ரீ திரு மலையிலே புகுந்து கிடந்தது அங்கே பார்த்த வாறே நின்ற படியைக் கண்டார் – இன்னமும் போக்கிலே ஒருப்பாடு தோற்றி இருந்தது என்று அவ்விடமே தொடங்கி அடி ஒத்தினவாறே வடக்குத் திரு வாசலாலே புகுந்து படுக்கை இங்கேயாய் இருந்தது -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ அமலனாதி பிரான் அருளிச் செய்யா நிற்க நான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார்) 1
வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால் மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல் உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே –5-5-1
பதவுரை Show / Hide
வெருவாதாள், Veruvaathaal - அஞ்சாதவளாய்க் கொண்டு (- (என் பெண் பிள்ளையானவள்) (வேங்கடமே வேங்கடமே என்கின்றாள்–;))
வாய் வெருவி, Vaai Veruvi - வாய்பிதற்றுகின்றவளாய்
என்குடங்கால் மருவாள், Enkudankaal Maruvaal - எனதுமடியில் பொருந்து கின்றிலள்;
வாள் நெடு கண் துயில் மறந்தாள், Vaal Nedu Kan Thuyil Marandhaal - வாள்போன்று நீண்ட கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்;
வண்டு, Vandu - வண்டுபோலவும்
ஆர் கொண்டல், Aar Kondaal - பூர்ண மேகம்போலவும்
உரு ஆளன், Uru Aalan - திருவுருவமுடையவனும்
வானவர் தம் உயிர் ஆளன், Vaanavar Tham Uyir Aalan - நித்யஸூரிகளுக்கு உயிராயிருப்பவனும்
ஒலி திரை நீர், Oli Thirai Neer - கோஷிக்கின்ற அலைநீர்
பௌவம் கொண்ட திரு ஆளன், Pauvam Konda Thiru Aalan - பொருந்திய கடலில் நின்றும் கொள்ளப்பட்ட பிராட்டியை ஆள்பவனமான எம்பெருமான்
என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - எனது பெண்பிள்ளை திறத்துச்செய்தவகைகளை
நான் எங்ஙனம் சிந்திக்கேன், Naan Engnganam Sindhikkeen - நான் நினைக்கத்தான் முடியுமோ?