திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1389 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து – தன் சௌலப்யத்தைக் காட்டி விலையாளா யடியேனை வேண்டுதியோ -என்று இவளை இட்டு சொல்லுவித்துக் கொள்ளுகைகாக திரு மெய்யத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் -பின்னானார் வணங்கும் சோதியில் போலே – யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவ -என்கிறபடியே முற்பாடரான சூரிகளுக்கும் அவ்வருகாய் இருந்து வைத்து இவ்வருகு உண்டான பிற்பாடருக்கும் உதவுகைக்காக இறே இங்கு வந்ததும் – தானே ரஷகன் என்று இருக்கும் இவளை வாய் விட்டுக் கூப்பிடும்படி பண்ணினானே- நமக்கு ஓன்று செய்யப் பிராப்தி உண்டோ -என்று இருக்கிறாள் இவள் பெறுவது அவனை யானால் இருந்த இடத்தே இருக்கப் போமோ -என்று இருக்கிறாள் மகள்) 2 | கலையாளா வகலல்குல் கனவளையும் கை யாளா என் செய்கேன் நான்
விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழு எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே –5-5-2 | பதவுரை Show / Hideஅகல் அல்குல் கலை ஆளா, Akal Alkul Kalai Aalaa - அகன்ற நிதம்பமானது வஸ்த்ரத்தை தரிக்கின்றதில்லை; (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம்) (நான் சிந்திக்கேன்)) கை கனம் வளையும் ஆளா, Kai Kanam Valaiyum Aalaa - கைகளானவை பொன் வளைகளை ஆள்கின்றனவில்லை; நான் என் செய்கேன், Naan En Seigkeen - (இதற்கு) நான் என்ன பண்ணுவேன்? அடியேன், Adiyen - “அடியவளாகிய என்னை விலை ஆள் ஆ, Vilai Aal Aa - பிறர்க்கு விற்கவும் உரிய வேலைக்காரியாக (க் கொள்ள) வேண்டுதியோ, Vendudiyoo - திருவுள்ளம் பற்றுவாயோ? வேண்டாயோ, Vendaayo - மாட்டாயோ?” என்னும், Ennum - என்கிறாள்; மெய்யம் மலை ஆளன், Meyyam Malai Aalan - திருமெய்யமலையை இருப்பிடமாக வுடையவனும் வானவர் தம் தலையாளன், Vaanavar Tham Thalaiyalan - நித்யஸூரிகளுக்குத் தலைவனாயிருப்பவனும் ஏழ் மாமரம் எய்த வென்றி சிலை ஆளன், Ezhu Maamaram Eytha Vendri Silai Aalan - ஸப்தஸாலவ்ருக்ஷங்களைத் துளைத்த ஜயசீலமான அம்மை உடையவனமான பெருமான் |