திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1390 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சக்கரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் என்று ஒரு நோன்பு நோற்று பெற்றால் போலே கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது-இவற்றை புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும் என்று இதுக்கு அன்றோ இவனைப் பெற்றது ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை) 3 | மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே –5-5-3 | பதவுரை Show / Hideமான் ஆய மென் நோக்கி, Maan Aaya Men Nookki - மானின் நோக்குப் போன்ற அழகிய நோக்கை உடையளான என் மகள், (- (அம்மனைமீர் அறிகிலேன்–.)) வாள் நெடு கண் நீர் மல்கும், Vaal Nedu Kan Neer Malkum - ஒளி பொருந்திய நீண்ட கண்கள் நீர் நிரம்பப் பெற்றிருக்கின்றாள்; வளையும், Valaiyum - (இவளது) வளைகளும் சோரும், Soorum - (கையில் நின்று) நழுவாநின்றன; தேனாய, Thennaay - தேனைக்கொண்ட நறு துழாய், Naru Thuzhai - மணம்மிக்க திருத்துழாயினாலாகிய அலங்கலின், Alankalin - மாலையினுடைய திறம், Thiram - பரிசுகளை பேசி, Paesi - சொல்லிக்கொண்டு உறங்காள், Urangaal - உறக்கமற்றிருக்கின்றாள்; காண்மின், Kaanmin - (இந்நிலைமையைக்) கண் கொண்டுபாருங்கள்; கான் ஆயன், Kaan Aayan - காட்டிலே திரியுமவனும் கடி மனையீல், Kadi Manaiyil - காவலுள்ள வீடுகளிலும் தயிர் உண்டு, Thayir Undu - தயிரை உட்கொண்டு நெய் பருக, Ney Paruga - நெய்யைக் குடிக்கும்படியாக நந்தன் பெற்ற, Nandhan Pettra - நந்தகோபர் பெற்ற ஆன் ஆயன், Aan Aayan - கோபாலக்ருஷ்ணனுமான பெருமான் என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - என் பெண்பிள்ளையைப் பண்ணின படிகளை |