திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1391 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1391பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாயையும் அல்லாதாரையும் ஒக்க அபேஷிக்கும் படி நிருபாதிக பந்துவான தன் பக்கலிலே பாவ பந்தத்தை பிறப்பிக்கிறவன் வர்த்திக்கிற தேசம் எங்கே -என்னா நின்றாள் ஸ்வாமித்வம் இவை போலே ஔபாதிகம் அல்ல இறே எம்பெருமான் -என்னைத் தோற்பித்தவன் என்றே காணும் அவனை அறிவது இது இறே நமஸ் சப்தார்த்தம்) 4
தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கை யே யாரச் சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் பேய் மாய முலை உண்டு இவ்வுலகுண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய் மா மாயன் என் மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே –5-5-4
பதவுரை Show / Hide
தாய் வாயில் சொல் கேளாள், Thaai Vaayil Sol Kelaal - தாயாகிய என்னுடைய வாய்ச் சொல்லை (என்மகள்) கேட்பதில்லை; (- (நங்காய்!, மங்கைமீர்!-;))
தன் ஆயத்தோடு அணையாள், Than Aayaththodu Anaiyaal - தனது தோழிமார்களுடன் கூடுவதில்லை;
தட மென் கொங்கையே ஆர சாந்து அணியாள், Thada Men Kongaiye Aara Santhu Anaiyaal - பருத்து மெல்லிதான (தனது) முலைகளையும் அழகாக சந்தனத்தினால் (முன்பு போல) அலங்கரிக்கின்றாளில்லை
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும், Emperumaan Thiru Arangam Engae Ennum - ‘என் ஸ்வாமி யெழுந்தருளியிருக்கிற திருவரங்கம் எங்கே?’ என்கிறாள்;
பேய் மாய முலை உண்டு, Pei Maaya Mulai Undu - பேய்ச்சியான பூதனை முடியும் படியாக (அவளது) முலைப் பாலைப் பருகி
இ உலகு உண்ட பெருவயிற்றன், I Ulaku Unda Peruvayitran - இவ்வுலகங்களையும் அமுது செய்த பெரிய திருவயிற்றையுடையனான
மா மாயன், Maa Maayan - மிகக் ஆச்சர்ய பூதன்
என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - என் பெண்பிள்ளைக்குச் செய்தவற்றை
பேசில், Pesil - சொல்லப்புகுந்தால்
மதிக்கிலேன், Mathikkilaen - அளவிட்டுச் சொல்ல மாட்டுகின்றிலேன்.