திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1392 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது நாம் அறிய -இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ-இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ நம்பி- பெண்களுக்கு கையாளாய்-அத்தாலே தன்னைப் பூர்ணனாக நினைத்து இருக்குமவன் அன்றோ) 5 | பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-5 | பதவுரை Show / Hideபூண் முலை மேல் சாந்து அணியாள், Poon Mulai Mel Santhu Anaiyaal - ஆபரணங்கள் அணிந்த முலையின்மேல் சந்தனத்தை பூசுகின்றாளில்லை; (- (என் மகளை செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேன்)) பொரு கயல் கண் மை எழுதாள், Poru Kayal Kan Mai Ezhudhaal - ஒன்றோடொன்று சண்டை செய்யுமிரண்டு மீன்கள் போன்றுள்ள கண்களிலே மையிட்டுக் கொள்ளுகிறாளில்லை; பூவை பேணாள், Poovai Peenaal - (தான் வளர்த்துக் கொண்டிருந்த) பூவைப் பட்சியையும் ஆதரிக்கின்றாளில்லை; எத்தனையும் ஏண் அறியாள், Ethanaiyum Aen Ariyaal - எந்த வஸ்துவையும் நெஞ்சினால் நினைக்கின்றாளில்லை; எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும், Emperumaan Thiru Arangam Engae Ennum - ‘என் ஸ்வாமியின் திருவரங்கம் எங்கே?’ என்பதொரு வார்த்தையையே சொல்லிக் கொண்டிருக்கிறாள்; நாள் மலராள் நாயகன் ஆய், Naal Malaraal Naayagan Aay - செவ்வித்தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு வல்லபனானவனும் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி, Naam Ariya Aayppaadi Valarntha Nambi - நமக்கெல்லாம் தெரியும்படியாகத் திருவாய்ப்பாடியில் வளர்ந்தவனுமான பெருமான் ஆண் மகன் ஆய், Aan Magan Aay - பெரிய ஆண்பிள்ளையாய்க் கொண்டு |