திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1394 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1394பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ விஷயத்திலும் இதர விஷயத்திலும் விரக்தியும் பகவத் விஷயத்தில் ப்ரீதியும் மாறாதே செல்லும்படியாய் இருப்பாள் ஒரு பெண் பிள்ளையை என்னைப் போலே புறம்பு பெற்றார் உண்டோ – அப்போது பீஷ்மாதிகள் அம்புக்கு தன்னை இலக்கு ஆக்கினால் போலே இப்போது தனக்காக இவளை காம ரசத்துக்கு இலக்கு ஆக்குகிறான் இப்போது இவளை அழிவுக்கு இட்ட படி என்னாலே பேசப் போமோ -என்கிறாள்) 7
வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில் பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான் தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் தேர் உய்த்த தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7
பதவுரை Show / Hide
வார்ஆளும் இள கொங்கை, Vaar Aalam Il Kogai - கச்சையிட்டுக் கட்டி ஆளக்கடவதான (தனது) இள முலைகள் (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேன்))
வண்ணம் வேறு ஆயின ஆறு எண்ணாள்;, Vannam Veeru Aayin Aaru Ennaal - நிறம் வேறுபட்ட விதத்தை நினைக்கின்றாளில்லை
எண்ணில், Ennil - ஏதேனுமொன்றை எண்ணப்புகுந்தால்
பேராளன் பேர் அல்லால் பேசாள், Peraalan Per Allaal Pesaal - ஸர்வேச்வரனது திருநாமங்களைத் தவிர வேறொன்றையும் பேசுகிறாளில்லை;
இ பெண் பெற்றேன் நான், I Pen Petraen Naan - இப்படிப்பட்ட பெண்ணைப் பெற்றேன் நான்
என் செய்கேன், En Seigken - என்ன பண்ணுவேன்?;
தார் ஆளன், Thaar Aalan - திருமாலை சாத்திக்கொண்டிருப்பவனும்
தண் குடந்தை நகர் ஆளன், Than Kudandhai Nagar Aalan - குளிர்ந்த திருக்குடந்தை நகரை ஆள்பவனும்
ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக
அமரில், Amaril - (பாரதப்) போரில்
உய்த்த தேராளன், Uytta Theraalan - நடத்தப்பட்ட தேரையுடையனுமான பெருமான்