திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1395 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1395பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கலக்கிற இடத்தில் தாழ நின்று பரிமாறின படியையும்-அதுக்கடியான சீலத்தையும் கலந்த போதை பரிமாற்றத்தின் வகைகளையும் – இதில் ஸ்ரோத்ரியன் ஆகைக்கு வ்யுத்புத்தி பண்ணின இடத்தையும் சொல்லா நிற்கும் –ஆஸ்ரித விஷயத்தில் வ்யாமோஹாதிசயத்தை உடையவன்-பெரியோன் என்றபடி – பிறவியை அறுப்பதான திரு நாமத்தை உடையவன் துக்க நிவர்தகமான திரு நாமங்கள் கிடீர் இவளுக்கு துக்கத்தை பண்ணுகிறது) 8
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல் மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால் பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள் அறவாளன் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-8
பதவுரை Show / Hide
உறவு ஆதும் இவள் என்று என்று, Uravum Aadhum Ival Endru Endru - ‘தாய் தந்தையர் என்கிற உறவு முறைகளைச் சிறிதும் உடையளல்லள்’ என்று பலகால் சொல்லி (- (இப்பெண்பிள்ளையோ வென்னில்) (மாயவனே! மாதவனே! என்கின்றாள்;) (என் மகளை செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேன்))
பலர் ஒழியாது ஏசும் அலர் ஆயிற்று, Palar Ozhiyadhu Aesum Alar Aayitru - பலபேர்கள் எப்போதும் குறைகூறும்படியான பழி விளைந்திட்டது;
மறவாதே எப்பொழுதும், Maravadhe Eppozhudhum - மறவாமல் ஸர்வகாலமும்
பிறவாத பேராளன், Piravatha Peraalan - கருமங்காரணமான பிறப்பையுடையனாகாத பெருமை பொருந்தியவனும்
பெண் ஆளன், Pen Aalan - பெண் பிறந்தாரைத் தனக்காகவுடையவனும்
மண் ஆளன், Man Aalank - மண்ணுலகத்தவர்களை ஆள்பவனும்
விண்ணோர் தங்கள் அறவாளன், Vinnor Thangal Aravaalan - நித்யஸூரிகளுக்குப் பரமதார்மிகனாயிருப்பவனுமான பெருமான்