திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1396 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1396பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால்-இதுக்கு மேல் எனனால் போக்கடி தேடப் போமோ இவள் தன் திறத்து படாது இருக்க தானே வந்து இப்படி பண்ணி-தானே உபேஷிப்பதே முன் தீமை செய்வானும் தானேயாய்-உபேஷிப்பானும் தானே யாவதே) 9
பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள் வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும் சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-9
பதவுரை Show / Hide
பந்தோடு கழல் மருவாள், Pandhodu Kazhal Maruvaal - பந்தையும் கழற்காய்களையும் தொடுகிறதுமில்லை; (- (என் மகள்) (என் மகளை செய்தனகள் அம்மனைமீர்! அறிகிலேன், அந்தோ!))
பை கிளியும் பால் ஊட்டாள், Pai Kiliyum Paal Oottal - (தனது) பசுமை தங்கிய கிளிக்குப் பாலூட்டுகிறதுமில்லை;
பாவை பேணாள், Paavai Paenaal - (விளையாட்டுக் கருவியான) மரப்பாச்சியை நோக்குவதுமில்லை;
திருஅரங்கன், Thiruarangan - “ஸ்ரீரங்கநாதன்
வந்தானோ வாரானோ  என்று என்றே, Vandaano Varaanoo Endru Endrae - வந்து விட்டானோ? என்றும் வரமாட்டானோ?” என்றும் சொல்லிக்கொண்டு
வளையும் சோரும், Valaiyum Soorum - கைவளைகள் கழல நிற்கின்றாள்
சந்தோகன், Sandhogan - சாந்தோக்ய உபநிஷத்தினால் ப்ரதிபாத்யனும்
பௌழியன், Pauzhiyan - கௌஷீதகீப்ராஹ்மணத்தினால் ப்ரதிபாத்யனும்
ஐந்து அழல் ஓம்பு, Ainthu Azhai Oombu - பஞ்சாக்நிகளினால் ஆராதிக்கப் படுபவனும்
தைத்திரியன், Thaitthiriyan - தைத்திரிய உபநிஷத்தினால் பிரதிபாதிக்கப் படுபவனும்
சாமவேதி, Saamavethi - ஸாமவேதப்ரதிபாத்யனுமான பெருமான்
வந்து, Vandhu - இவ்விடம் வந்து