திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1398 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1398பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் அல்லது ரஷகர் அல்லாதாரை அரியன செய்தும் ரஷிக்குமவனை – ஒரு கால் மலையை எடுத்து பசுக்களையும் இடையரையும் ரஷித்தான் – ஸ்ரீ திருப் பாற் கடலிலே கிடந்தான் -என்று கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே நான் ஸ்ரீ கோயிலிலே காணப் பெற்றேன்) 1
கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-1
பதவுரை Show / Hide
மானம் கை மழ களிற்றை, Maanam Kai Mazha Kalittrai - நீண்ட கையையுடைய இளமைதங்கிய யானை போன்றவனும்
கடல் கிடந்த கருமணியை, Kadal Kidandha Karumaniyai - கடலிலே கண்வளர்ந்தருள்கிற நீலமணி போன்றவனும்
மை மானம் மரதகத்தை, Mai Maanam Marathagaththai - பசுமை நிறம் மிக்கிருக்கப் பெற்ற மரகதப் பச்சை போன்றவனும்
மறை உரைத்த திருமாலை, Marai Uraitha Thirumalai - வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்ட ச்ரியபேதியானவனும்
எம்மானை, Emmanai - எனக்கு ஸ்வாமியானவனும்
எனக்கு என்றும் இனியானை, Enakku Endrum Iniyanai - எனக்கு எக்காலத்திலும் போக்யனா யிருப்பவனும்
பனி காத்த அம்;மானை, Pani Kaatha Am Maanai - மழையில் நின்றும் (ஆநிரையைக்) காத்தருளினவனுமான பொருமானை
யான் கண்டது, Yaan Kandathu - அடியேன் ஸேவிக்கப்பெற்றது (எவ்விடத்திலென்னில்)
அணிநீர் தென்அரங்கத்து, Anineer Thenarangkathu - அழகிய தீர்த்தம்பொருந்திய திருவரங்கத்திலே.