திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1401 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1401பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஊர்ந்து வருகிற சகடம் சின்னம் பின்னமாய் போம்படி திருவடிகளாலே உதைத்தவனை- ஸ்ரீ நரசிம்ஹமாய் ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவனை – பரைப்பை உடைய பூமி இரண்டு அடியாலே அடங்கும்படி திருவடிகளை நீட்டி அளந்து கொண்டவனை – யான் கண்டது அணி நீர் ஸ்ரீ தென்னரங்கத்தே) 4
வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலியுருவில் திரிசகடம் தளர்ந்து திற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப் பிளந்தவனைப் பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள் யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4
பதவுரை Show / Hide
தடங் கடலுள் வளர்ந்தவனை, Thadang Kadalul Valarnthavanai - விசாலமான கடலிலே திருக்கண் வளர்ந்தருளபவனும் (- (யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே–.))
வலி உருவின் திரி சகடம், Vali Uruvin Thiri Sakadam - வலிவுள்ள சரீரத்தை யுடைத்தாய்க்கொண்டு ஊர்ந்து வந்த (அஸுரனாலாவேசிக்கப்பட்ட) சகடமானது
தளர்ந்து உதிர உதைத்தவனை, Thalarndhu Uthira Uthaithavanai - கட்டுக்குலைந்து சிந்நாபிந்நமாகும்படி (அதனைத்) திருவடியால் உதைத்தவனும்
அன்று தரியாது இரணியனை பிளந்தவனை, Andru Thariyadhu Iraniyanai Pilandhavanai - ஒருகாலத்தில் பொறுத்திருக்கமாட்டாமல் இரண்யாசுரனைக் கிழித்துப்போட்டவனும்,
பண்டு ஒருகால், Pandhu Orukaal - மற்றுமொருகாலத்தில்
ஈர் அடி நீட்டி, Eer Adi Neetti - இரண்டு திருவடிகளைப் பரப்பிவைத்து
பெருநிலம் அளந்தவனை, Perunilam Alandhavanai - விசாலமான பூமியை யெல்லாம் அளந்து கொண்டவனுமான பெருமானை