திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1402 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்குத்தை மர்யாதைகளைத் தப்பி-அவ்வருகே பட்டார்க்கு பிராப்யமான ஸ்ரீ பரம பதமுமாய் – அத்தை அவர்கள் பெறுகைக்கு உறுப்பாக-பிராமணர்கள் உடைய யாகங்களிலே மந்திர பூர்வமான ஹவிஸ் ஸூக்களை த்ரேத அக்னி முகத்தாலே புஜிக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 5 | நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே
பேர் அழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5 | பதவுரை Show / Hideநீர் ஆய் அழல் ஆய் கெடு நிலன் ஆய் நின்றானை, Neer Aay Azhai Aay Kedu Nilan Aay Nindhiraanai - ஜலஸ்வரூபியாம் அக்நிஸ்வரூபியாயும் விசாலமான பூமிஸ்வரூபியாயும் இருப்பவனும், (- (கண்டது தென் அரங்கத்தே–.)) அன்று, Andru - ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த காலத்து அரக்கன் ஊர், Arakkan Oor - இராவணனுடைய நகரமான இலங்கையை கண்டார் பின் காணாமே, Kandaar Pin Kaanamae - முன்பு கண்டவர்கள் பின்பு காணவொண்ணாதபடி அழலால் உண்டானை, Azhalaal Undaanai - அக்நிக்கு இரையாக்கினவனும், பேர் அழல் ஆய், Paar Azhai Aay - பெரியபடபாக்னி ஸ்வரூபியும் பெரு விசும்பு ஆய், Peru Visumbu Aay - பரமபதத்துக்கு நிர்வாஹகனும் பின், Pin - அதற்குமேலே, மறையோர் மந்திரத்தின் ஆர் அழலால் உண்டானை, Maraiyore Mandiraththin Aar Azhalaal Undaanai - வைதிக ப்ராஹ்மணர்களினுடைய மந்த்ரபூதமான ஹவிஸ்ஸை அக்நிமுகத்தாலே அமுதுசெய்பவனுமான பெருமாளை |