திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1405 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1405பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னையே பற்றின என்னோடு-சம்பந்தம் உடையாருக்கும்-வைஷ்ணவர்களுக்கும் -என்றபடி எனக்கும்-எனக்கு தாயும் தமப்பனும் என்று இருக்கிற இவர்களுக்கும் நித்ய சூரிகளுக்கும் ஒக்க தரம் வையாதே சேஷியாய் இருக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 8
துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும் அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானைத் தன் அடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும் அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-8
பதவுரை Show / Hide
துவரித்த உடையவர்க்கும், Thuvariththa Udaiyavarkkum - காவித்துணி கட்டித் திரியும் பௌத்தர்களும் (- (கண்டது தென் அரங்கத்தே))
தூய்மை இல்லா சமணர்க்கும் அவர்கட்கு, Thuymai Illaa Samanarkkum Avarkadku - பரிசுத்தியற்றவர்களான ஜைநர்களுமான அந்த அவைதிகர்கள் விஷயத்தில்
அருள் இல்லா, Arul Illaa - அருள் செய்யாதவனும்
அருளானை, Arulaanai - (வைதிகர் திறத்தில்) அருள் செய்பவனும்,
தன் அடைந்த, Than Adaindha - தன்னையே ஆச்ரயித்த
எமர்கட்கும், Emarkadkum - என்னைச் சேர்ந்தவர்களுக்கும்
அடியேற்கும், Adiyerkum - அடியேனுக்கும்
எம்மாற்கும், Emmaarkkum - எனது தகப்பனுக்கும்
எம் அனைக்கும், Em Anaikkum - எனது தாய்க்கும்
அமரர்க்கும், Amararukkum - நித்ய ஸூரிகளுக்கும்
பிரானரை, Piranarai - ஸ்வாமியாயிருப்பவனமான பெருமானை