திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1406 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாஹ்யேந்திரங்கள்-விஷயங்களில் போகாதபடி பண்ணி – ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக தன் பக்கலிலே பக்தியைப் பண்ணுமவர்களுக்கு-தன் ஸ்வரூபாதிகளை உள்ளபடியே காட்டிக் கொடுக்கும் விஸ்மயநீயனை –யான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 9 | பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-9 | பதவுரை Show / Hideபொய் வண்ணம் மனத்து அகற்றி, Poi Vannam Manathu Akattri - ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை மனத்தில் நின்றும் ஒழித்துவிட்டு (- (யான் கண்டது தென் அரங்கத்தே–.)) புலன் ஐந்தும் செலவைத்து, Pulan Aindum Selavaiththu - பஞ்சேந்திரியங்களையும் அப்பாற்படுத்தி மெய்வண்ணம் நினைந்தவர்க்கு, Meivannam Ninaindhavarkku - உண்மையாகத் தன்னைச் சிந்திப்பவர்களுக்கு மெய் நின்ற, Mei Nindra - தன் ஸ்வரூபத்தை உள்ளபடியே காட்டிக்கொடுக்கின்ற வித்தகனை, Viththakanai - ஆச்சர்யபூதனும், மை வண்ணம், Mai Vannam - அஞ்சனத்தின் நிறம்போன்ற நிறத்தையும் கரு முகில் போல் திகழ் வண்ணம் மரதகத்தின் அவ் வண்ணம், Karum Mukil Pol Thigazh Vannam Marathakaththin Av Vannam - காளமேகம் போல் விளங்குகின்ற நிறத்தையுடைய மரதகப் பச்சையின் அப்படிப்பட்ட நிறத்தையும் வண்ணனை, Vannai - தனக்கு நிறமாக வுடையனுமான பெருமானை. |