திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1408 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1408பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றைச் சொன்ன பாசுரம் தன்னளவும் வரும்படியாய் இருக்கையாலே இவை அடைய -தான் -என்று சொல்லும்படி சரீரதயா சேஷமாகத் தான் சேஷியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் – என்கிறார்) 1
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1
பதவுரை Show / Hide
பண்டை நால் மறையும், Pandai Naal Maraiyum - அநாதியாகவுள்ள நான்கு வேதங்களும் (- (ஆகிய இவற்றோடு கூடின))
வேள்வியும், Velviyum - யாகங்களும்
கேள்வி பதங்களும், Kelvi Pathangalum - கேட்டறியவேண்டிய வியாகரணமும்
பதங்களின் பொருளும், Pathangalil Porulum - அந்தந்த பதங்களினால் அறியப்படுகிற ஜீவஸமஷ்டியும்,
பிண்டம் ஆய் விரிந்த, Pindam Aayi Virindha - (காரியப் பொருள்களுக்கெல்லாம் காரணமாய்க்கொண்டு) பிண்டரூபமாயிருந்து பிறகு விரிவுபெற்றவைகளான
பிறங்கு ஒளி அனலும், Pirangu Oli Analum - மிக்க காந்தியையுடைய அக்நியென்ன
பெருகிய புனலொடு, Perugiya Punalodu - த்ரவரூபமான ஜலமென்ன
நிலனும், Nilanum - பூமியென்ன
கொண்டல், Kondal - மேகமென்ன
மாருதமும், Maruthamum - வாயுவென்ன
குரை கடல் ஏழும், Kurai Kadal Ezhum - ஆரவாரிக்கின்ற ஸப்த ஸாசரங்களென்ன
ஏழு மா மலைகளும், Ezhum Maa Malaihalum - ஏழுகுல பர்வதங்களென்ன
விசும்பும், Visumbum - ஆகாசமென்ன
அண்டமும், Andamum - பிரமாண்டமும்
தான் ஆய் நின்ற எம்பெருமான், Thaan Aayi Nindra Emperumaan - ‘தான்’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கும்படி தனக்கு ப்ரகாரமாயிருக்கப்பெற்ற எம்பெருமான்
அரங்கம் மா நகர் அமர்ந்தான் –, Arangam Maa Nagar Amarnthaan - திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ளான்,