திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1409 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1409பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சகல பிராணிகள் உடைய சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்கும் கடவனாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் –ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ அரங்க நகர் அமர்ந்தானே) 2
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப் பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே –5-7-2
பதவுரை Show / Hide
இந்திரன் பிரமன் ஈசன் என்ற இவர்கள், Indiran Brahman Eesan Endra Ivargal - இந்திரன் பிரமன் ருத்ரன் எனப்படுகிற இத்தேவர்கள் (- (அரங்கம் மா நகர் அமர்ந்தான்))
எண் இல், En Il - கணக்கில்லாத
பல் குணங்களே இயற்ற, Pal Gunangalye Iyatra - பல திருக்குணங்களையும் சொல்லித்துதிக்கப் (பெற்றவனாய்),
பல் உயிர்க்கு எல்லாம், Pal Uyirkkum Ellam - ஜீவராசிகளுக்கெல்லாம்
தந்தையும் தாயும்; மக்களும் மிக்க சுற்றமும், Thandaiyum Thaayum Makalum Mikka Sutramaum - தகப்பனும் மாதாவும் பிள்ளைகளும் அளவறந்த ஜ்ஞாதிகளும்
சற்றி நின்று அகலா பந்தமும், Sattri Nindru Akalaa Pandhamum - சூழ்ந்து கொண்டிருந்து விட்டுப்பிரிய மாட்டாத பந்துவர்க்கமும்
பந்தம் அறுப்பது ஓர் மருந்தும், Pandham Aruppadhu Oru Marundhum - ஸம்ஸாரபந்தத்தை அறுக்க வல்ல ஒரு மருந்தும்
பான்மையும், Paanmaiyum - (ஸம்ஸாரபந்தமற்றபின் விளையக்கூடிய) நிர்மல ஸ்வபாவமும்
அந்தமும், Andhamum - விநாசமும்
வாழ்வும், Vazhvum - வாழ்ச்சியும்
ஆய, Aay - தானேயாயிருப்பவனான
எம் பெருமான், Em Perumaan - ஸ்வாமியானவன்