திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1410 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1410பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னைப் பேணாதே கேட்கிறவனுக்கு ஆச்சார்ய அநுவர்த்தனம் பண்ண வேண்டுகிறதோ -என்று கூச வேண்டாத வடிவைக் கொண்டு தன்னைப் பெறிலும் பெற ஒண்ணாத வேதங்களை வெளியிட்டவன் – அன்று பிரமாணத்தை வெளி இட்டுத் தந்தவன்-இன்று பிரமேய பூதனான தன்னை வெளி இட்டுக் கொண்டு வந்து கண் வளர்ந்து அருளினான்) 3
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும் துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறந்கிருள் நிறம் கெட ஒரு நாள் அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-3
பதவுரை Show / Hide
மன்னு மா நிலனும், Mannu Maa Nilanum - ஸ்தாவரமான பெரிய பூமியும் (- (அன்று ஒருநாள் அங்கு;) (அரங்கம் மா நகர் அமர்ந்தான்;))
மலைகளும், Malaigalum - மலைகளும்
கடலும், Kadalum - ஸமுத்ரங்களும்
வானமும், Vaanamum - ஆகாசமும்
தானவர் உலகும், Dhanavar Ulakum - அசுரர்களினிருப்பிடமும் (ஆகிய இவையெல்லாம்)
துன்னு மா இருள் ஆய், Thunnu Maa Irul Aay - நெருங்கிய போரிருள் மூடப்பெற்றவனாய்
துலங்க ஒளி சுருங்கி, Thulanga Oli Surungi - விளங்கும் பிரகாசம் மழுங்கி
தொல்லை நால் மறைகளும் மறை, Thollai Naal Maraihalum Marai - பழைய நால்வேதங்களும் மறைந்துபோக,
பின்னும், Pinnum - மீண்டும்
வானவர்க்கும், Vaanavarkkum - தேவர்களுக்கும்
முனிவர்க்கும், Munivarkkum - ரிஷிகளுக்கும்
நல்கி, Nalki - அருள்கூர்ந்து
பிறங்கு இருள் நிறம் கெட, Pirangu Irul Niram Keda - நிபிடமான இருள் நீங்கும்படியாக
அரு மறை பயந்தான், Aru Marai Bayandhaan - அரிய வேதங்களை உபகரித்தருளினவன்