திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1411 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1411பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான்கு தோள்கள் கொண்டு வ்யாபரித்த படி தான் ஆயிரம் தோள் கொண்டு வ்யாபரித்தான் என்னலாம்படி யாய்த்து) 4
மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக மாசுணம் அதனோடும் அளவி பாயிரும் பௌவம் பகடு விண்டலறப் படுதிரை விசும்பிடைப் படர சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவும் தாமுடன் திசைப்ப ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-4
பதவுரை Show / Hide
மா இரு குன்றம் ஒன்று, Maa Iru Kuntram Ondru - அகன்றும் உயர்ந்துமிருக்கிற (மந்தரமென்னும்) ஒருமலையை (- (அரங்கம் மா நகர் அமர்ந்தான்))
மத்து ஆக, Maththu Aaga - மத்தாகக்கொண்டு
அதனொடும், Adhanodum - அம்மலையிலே
மாசுணம், Masunam - (வாஸுகியென்னும); நாகத்தை
அளவி, Alavi - சுற்றி,
பா இரு பௌவம், Paa Iru Pouvam - பரந்தும் நீண்டுமிருக்கிற ஸமுத்ரம்.
பகடு விண்டு அலற, Pagadu Vindu Alara - யானைபிளிறுமா போலே பிளிறவும்
படு திரை, Padu Thirai - உண்டான அலைகள்
விசும்பிடை படர, Visumbidai Padara - ஆகாசத்திலே சென்றுகிட்டி வியாபிக்கவும்
சே இரு விசும்பும், Che Iru Visumbum - மிக்க உயரத்திலுள்ள ஸ்வர்க்காதி லோகங்களும்
திங்களும், Thingalum - சந்திரமும்
சுடரும், Sudarum - (மற்றுமுள்ள) தேஜஸ் பதார்த்தங்களும்
தேவர் தாமும், Thevar Thamum - தேவதைகளும்
உடன், Udan - எக்காலத்திலே
திசைப்ப, Thisaippa - ஆச்சரியப்படவும்
அலைகடல், Alaikadal - அலையெறிகின்ற கடலை
ஆயிரம் தோளால், Aayiram Tholal - பல திருக்கைகளினால்
கடைந்தான், Kadaindhaan - கடைந்தருளினவன்