திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1413 | பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய அனுபவம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக புகரை உடைத்தான பல வாய்களையும் உடைய ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினவன் அப்படியே காணலாம்படி இங்கே வந்து சந்நிஹிதன் ஆனான்) 6 | ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-6 | பதவுரை Show / Hideஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய, Aayiram Kuntram Sendru Thokkanaiya - ஆயிரம் மலைகள் நெருங்கச் சேர்ந்தாற்போலே இருக்கப் பெற்றவையும் (- (அரங்கம் மா நகர் அமர்ந்தான்)) அடல் புரை, Adal Purai - யுத்தத்திற்குத் தகுதியானவையும் எழில் திகழ், Ezhil Thigal - அழகு பொலிந்தவையும் திரள் தோள் ஆயிரம் திரண்டவையுமான, Thiral Thol Aayiram Thirandavaiyumana - (கார்த்த வீர்யார்ஜுநனுடைய) தோள்களாயிரமும் துணிய, Thuniya - அறும்படியாக அடல் மழு பற்றி, Adal Mazhu Patri - தீக்ஷ்ணமான மழுப்படையைக் கையிற்கொண்டு மற்றவன், Mattravan - அந்தக்கார்த்த வீரியார்ஜுநனை அகல் விசும்பு அணைய, Akal Visumbu Anaiya - விசாலமான வீரஸ்வர்க்கத்தையடையச் செய்து (அதன் பின்) அமரர், Amarar - தேவர்கள் சென்று, Senru - கிட்டி ஆயிரம் பெயரால் இறைஞ்ச, Aayiram Peyaraal Irajinja - ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லித் துதிக்க ஆலை கடல நடுவே, Aalai Kadala Naduve - அலையெறிகின்ற ஸமுத்ரமத்யத்தில் சுடர், Sudar - ஒளிபொருந்திய ஆயிரம் வாய், Aayiram Vaai - ஸஹஸ்ரமுகங்களையுடைய அரவு அணை, Aravu Anai - திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியிலே அறிது துயில் துயின்றான், Aridhu Thuyil Thuyinraan - யோகநித்திரை பண்ணும் பெருமான் |