திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1415 | பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய பிரகாசத்துக்கு அடைத்த சாலம் தன்னிலே அநேக ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே இருந்துள்ள புகரை உடைய ஸ்ரீ திரு ஆழியைக் கொண்டு அந்த ஆதித்யனை மறைத்தவன் – இந்த ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே முகக்கலாம் படி அளவு பட்டு இருக்கையாலே தமஸ்ஸூ போம்படியாய் இருக்கும் –- அங்கன் அன்றிக்கே ஸ்ரீ திரு ஆழி ஆழ்வான் தேஜஸ்ஸூ நேர் கொடு நேர் கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி மிக்கு இருக்கையாலே பளபளத்து கண்ணை இருளைப் பண்ணிற்று) 8 | ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடுசரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-8 | பதவுரை Show / Hideஊழி ஆய், Oozhi Aay - காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும நிர்வாஹகனாய் (- (அன்று அங்கு;) (அரங்கம் மா நகர் அமர்ந்தான்)) ஓமத்து உச்சி ஆய், Omaththu Uchi Aay - யஜ்ஞங்களுக்குத் தலைவனாய் ஒருகால் உடைய தேர் ஒருவன் ஆய், Orukaal Udaiya Ther Oruvan Aay - ஒற்றைச் சக்கரத்தேர் வலவனான ஸூர்யனுக்கு அந்தராத்மாவாய் உலகில், Ulagil - இவ்வுலகத்திலே, சூழி மால் யானை, Sozhi Maal Yaanai - முகபடாத்தையுடைத்தாய்ப் பெரிதான ஸ்ரீகஜேந்திரத்தினுடைய துயர் கெடுத்து, Thuyar Keduthu - துன்பத்தைப் போக்கினவனாய் அன்று இலங்கை மலங்க அடு சரம் துரந்து, Andru Ilangai Malanga Adu Saram Thurandhu - முன்பொருகால் லங்காபுரியானது பங்கமடையுமாறு கொலையம்புகளைப் பிரயோகித்தவனாய், பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி, Paazhiyaal Mikka Paarththanukku Aruli - வலிமைமிகுந்த அர்ஜுநனுக்கு அருள்கூர்ந்து பகலவன் ஒளி கெட, Pagalavan Oli Keda - ஸூர்யன் ஒளிமழுங்கும்படி பகலே, Pagale - பகற்போதிலேயே ஆழியால் ஆழியை மறைத்தான், Aazhiyaal Aazhiya Maraitthaan - சக்கராயுதத்தினால் ஸூர்யனை மறைத்தவனான பெருமான் |