திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1416 | பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகளுக்கு தூரஸ்தனாய்–என் போல்வாருக்கு கையாளாய்- என் பக்கல் அபேஷா மாத்ரமும் இன்றிக்கே இருக்கத் தானே வந்து என்னுடைய மானஸ வ்யசனத்தைப் போக்கும் –ஆயனாய் ஸ்ரீ கோவர்த்தன கிரியைத் தரித்து பண்ணின உபகாரம் அறியாத பசுக்களையும் இடையரையும் நோக்கினவன்) 9 | பேயினார் முலை யூண் பிள்ளையாய் ஒரு கால் பெரு நிலம் விழுங்கி யது உமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச்
சேயனாய் அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-9 | பதவுரை Show / Hideபேயின் ஆர் முலை ஊண் பிள்ளை ஆய், Peyin Aar Mulai Oon Pillai Aay - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய (விஷம்) நிறைந்த முலையை உணவாகக் கொண்ட பேதையாய் (- (அரங்கம் மா நகர் அமர்ந்தான்)) ஒருகால் பெருநிலம் விழுங்கி அது உமிழ்ந்தவாயன் ஆய், Orukaal Perunilam Vizhungki Adhu Umizhndhavaayan Aay - (பிரளயம் நேர்ந்த) ஒருகாலத்தில் விசாலமான பூமியை உட்கொண்டு (பிறகு ஸ்ருஷ்டி காலத்தில்) அந்தப் பூமியை வெளிப்புறப்படவிட்ட திருப்பவளத்தையுடையனாய், மால் ஆய், Maal Aay - ஸர்வேச்வரனாய், ஆல் இலை வளர்ந்து, Aal Ilai Valarnthu - ஆலந்தளிரில் கண்வளர்ந்தருளினவனாய் முணி முடி வானவர் தமக்கு சேயன் ஆய், Muni Mudi Vaanavar Thamakku Seeyan Aay - மணிமுடி யணிந்த தேவதைகளுக்கு எட்டாதவனாய் அடியேற்கு அணியன் ஆய் வந்து, Adiyeerkku Aniyan Aay Vandhu - அடியேனுக்குக் கிட்டவந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும், En Sindhaiyul Vem Thuyar Arukkum - எனது நெஞ்சிலுள்ள வெவ்விய துக்கங்களைப் போக்குமவனாய் அன்று, Andru - முன்பொருகால் ஆயன் ஆய் குன்றம் ஒன்று எடுத்தான், Aayan Aay Kunram Ondru Eduththaan - கோபால க்ருஷ்ணனாகத் திருவவதரித்து கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்தவனான பெருமான் |