திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1417 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1417பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லஷணங்களில் ஒன்றும் குறையாத படி விஸ்ருதமான வித்தை அப்யசிக்க வல்லார் ப்ராரப்தமான கர்மங்களை வாசனையோடு போக்கப் பெறுவார்) 10
பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே –5-7-10
பதவுரை Show / Hide
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து, Ponnum Maa Maniyum Muththamum Sumandhu - பொன்களையும் சிறந்த ரத்தனங்களையும் முத்துக்களையும் திரட்டிக்கொண்டு
திரை பொரு மா நதி புடை சூழ்ந்து, Thirai Poru Maa Nathi Pudai Soozhndhu - அலையெறிந்துகொண்டு வருகின்ற பெரியநதியாகிய திருக்காவேரியினால் இரு பக்கமும் சூழப்பெற்றும்
மாடு அன்னம் உலவும் அலை புனல் சூழ்ந்த, Maadu Annan Ulavum Alai Punal Soozhndhu - பக்கங்களிலே அன்னப்பறவைகள் உலாவப்பெற்ற அலைகொண்ட தடாகங்களினால் சூழப் பெற்றுமிருக்கின்ற
அரங்கம் மா நகர், Arangam Maa Nagar - திருவரங்கம் பெரிய கோயிலில்
அமர்ந்தானை, Amarnthaanai - பொருந்தியுள்ள பெருமானைக்குறித்து,
மன்னு மா மாடம் மங்கையர் தலைவன், Mannu Maa Maadam Mangaiyar Thalaivan - சாச்வதமான பெரிய மாடங்களையுடைய திருமங்கையில் உள்ளார்க்குத் தலைவரும்
மானம் வேல், Maanam Vel - சிறந்த வேலாயதத்தையுடையவருமான
கலியன், Kaliyan - ஆழ்வார்
வாய் ஒலிகள் பன்னிய பனுவல், Vaai Oligal Panniya Panuval - விஸ்தரித்தருளிச் செய்த இப்பாசுரங்களை
பாடுவார், Paaduvaar - பாடுமவர்கள்
நாளும் பழ வினைபற்று அறுப்பார், Naalum Pazha Vinaipatru Aruppaar - எந்நாளும் கல்மஷ ஸம்பந்தமற்றிருப்பர்கள்.