திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1419 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1419பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்ம வ்ருத்தங்களால் குறைய நின்ற ஸ்ரீ குஹப் பெருமாள் பக்கல் பண்ணின விஷயீ காரத்தை என் பக்கலிலே பண்ண வேணும் என்று சரணம் புக்கார் -கீழில் பாட்டில் மனுஷ்ய சஜாதீயத்வம் கிடக்கச் செய்தே வந்த நிகர்ஷம் இறே -கீழ்ச் சொல்லிற்று இங்கு விசஜாதியமான திர்யக்கை அகப்பட-தத்கத நிகர்ஷம் பாராதே விஷயீ கரித்த மாத்ரம் அன்றிக்கே அந்தபுர கைங்கர்யத்திலே ஏவி அடிமை கொண்டால் போலே என் அளவிலும் கைங்கர்யத்தைக் கொள்ள வேணும் -என்கிறார் – இவ்வதிகாரிக்கு விஷயீகார அநந்தரம் கைங்கர்யத்தில் அன்வயிக்கும் அத்தனை போக்கி சாதனத்தில் அன்வயிக்க வேண்டியது இல்லை போலே காணும் இங்கு ஒழி என்கிற இடத்தில் சொல்லிற்று இத்தனை இறே) 2
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2
பதவுரை Show / Hide
வாதம் மா மகன், Vadhama Maa Magan - வாயுதேவனது பெரிய குமாரனான அனுமான் (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!-;) (அடி இணை அடைந்தேன்–.))
மற்று ஓர் சாதி விலங்கு மற்கடம் என்று ஒழிந்திலை, Mattru Oru Saadhi Vilangu Markadham Endru Ozhindilai - வேறு ஜாதியிற் பிறந்தவனென்றும், அதிலும் பகுத்தறிவில்லாத மிருகமென்றும், அதிலும் பலவகைப் பொல்லாங்குகளையுடைய குரங்கென்றும் (அவனது இழி குணங்களைப் பாராட்டி) விட்டிடாதவனாய்
உகந்து, Ugandhu - அவனிடம் அன்புவைத்து
காதல் ஆதரம் கடலினும் பெருக, Kaadhal Aadharam Kadalinum Peruga - அன்பும் ஆசையும் கடலைக் காட்டிலும், அதிகமாக வளர
செய், Sei - (நமக்கு இவன்) செய்த
தகவினக்கு, Thagavinaikku - உபகாரங்களுக்கு
கைம்மாறு இல்லை, Kaimaarru Illai - பிரதியுபகாரம் இல்லை’
என்று, Endru - என்று திருவுள்ளம் பற்றி
கோது இல் வாய் மையினாயொடும் உடனே உண்பன் நான், Kothu Il Vaai Maiyinayodum Udaney Unban Naan - குற்றமற்ற மெய்ம்மொழிகளை யுடையனான உன்னோடு உடனிருந்து உண்பேன்யான்’
என்ற, Endra - என்று (அவ்வனுமானைக் குறித்துக்) கூறியருளின
ஒண் பொருள், On Porul - சிறந்த விஷயம்
எனக்கும் ஆதல் வேண்டும் என்று, Enakkum Aadhai Vendum Endru - எளியனான அடியேன் விஷயத்திலும் உண்டாகவேண்டும் என்றெண்ணி