திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1420 | பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஷயீகாரத்தையும்-விஷயீகார பலமான கைங்கர்யத்தையும்-சொல்லிற்று கீழ் கைங்கர்யத்துக்கு இடைச் சுவரான விரோதியைப் போக்கி-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை கைங்கர்யத்திலே அன்வயித்தால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னைக் கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்க வேணும் -என்கிறார் – விஷயீகாரத்துக்கும் கைங்கர்யத்துக்கும் நிகர்ஷம் முன்னிட வேண்டுகையாலே சொன்னார் கீழ் விரோதி நிரசனத்துக்கு நிகர்ஷம் முன்னிட வேண்டியது இல்லை இறே விஷயீகாரம் ஆகிறது -உபாயத் தளவும் செல்ல பலிக்குமது இறே அவன் உபாயம் ஆனால் பின்னை கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்கும் இத்தனை அதுக்கு விரோதி அறுகை இறே பின்னை உள்ளது-அந்த விரோதி தான் உபய ஆகாரமாய் இருக்கக் கடவது அவை ஆகிறன-இந்த்ரிய வஸ்யதையும் யம வஸ்யதையும் இறே மேலில் பாட்டில் யம வச்யததை-இங்கு இந்த்ரிய வச்யதை சொல்லுகிறது எங்கனே என்னில் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையை நிரசித்தால் போலே எனக்கு விரோதியான இந்த்ரியங்களை நிரசித்து அருள வேணும் -என்கிறார் இவ்வதிகார்க்கு இந்த்ரிய வஸ்யதையாவது-விஷயாந்தர ப்ராவண்யம் முதலாய் கைங்கர்ய ஸ்பர்சியான அஹங்காரம் மமகாரம் முடிவாய் இறே இருப்பது) 3 | கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே –5-8-3 | பதவுரை Show / Hideகடி கொள் பூ பொழில் காமரு பொய்கை வைகுதாமரை வாங்கிய வேழம், Kadi Kol Poo Pozhil Kaamaru Poigai Vaikuthamarai Vaangiya Vezham - நறுமணங்கொண்ட மலர்கள் நிறைந்த சோலைகளாற் சூழப்பட்ட அழகிய பொய்கையிலே பொருந்திய தாமரைமலரை (அர்ச்சனைக்காகப்) பறித்த யானை யானது (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே;-) (அப்பொழுது நீ)) முடியும் வண்ணம், Mudiyum Vannam - மிகுந்த ஆபத்தையடையும்படி ஓர் முழு வலி முதலை பற்ற, Oru Muzhu Vali Muthalai Patra - மிக்க வலிமையையுடைய தொரு முதலையானது பிடித்துக்கொள்ள அது நின் சரண் நினைப்ப, Adhu Nin Saran Ninaippa - அதனால் வருந்திய அந்த யானையானது (தன்வலிமையால் விடுவித்துக்கொள்ள முடியாமல்) உனது திருவடிகளைத் தியானிக்க,) கோடிய வாய் விலங்கின் உயிர் மலங்க, Kodiyai Vaai Vilangin Uir Malangka - கொடுந்தன்மையுள்ள வாயையுடைய முதலையின் பிராணன் சிதையும் படி கொண்ட, Konda - வருவித்துக்கொண்ட சீற்றம் ஒன்று, Seetrham Ondru - ஒரு கோபம் உண்டு உளது, Undu Ulathu - உண்டாயுள்ளதை அறிந்து, Arindhu - தெரிந்து கொண்டு (உன் அடியனேனும் வந்து அடி இணை அடந்தேன்.) |