திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1422 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1422பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஷயீ காரத்தைச் சொல்லி-கைங்கர்யத்தைச் சொல்லி கைங்கர்யத்தின் உடைய உபய ஆகாரமான விரோதிகளைப் போக்கி தந்து அருள வேணும் -என்றார் கீழ் இதில் ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி உடைய கருத்து அறிந்து செய்தால் போலே என்னுடைய கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் – கீழ் நின்ற நிலைக்கு இவர்க்கு கருத்தாவது இந்த்ரிய வஸ்யதைக்கும் யம வஸ்யதைக்கும் அடியான-தேக சம்பந்தத்தை அறுத்து தர வேணும் என்கை மரணமானால் -என்கிறபடியே தன்னடையே சரீர விச்லேஷம் சித்திக்குமாகில் அபேஷிககிறது என் என்னில்-க்ரம ப்ராப்தி பற்றாத த்வேரா திரேகத்தாலே – ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி-என்பான் ஒரு பிராமணன் இதிஹாச புராண ஸ்ரவணத்தாலே ஸ்ரீ கிருஷ்ணன் உடைய பால்ய சேஷ்டிதங்களையும் ராச க்ரீடாதிகளையும் சாஷாத்கரித்து காமனாய் முன்பு காண வாராய் -என்று எண்ணி இருப்பார்க்கு பரித்ராணாயா சாது நாம் -என்கிறபடியே காட்டிக் கொடுத்து போருமவன் அன்றோ நமக்கும் அவ்வாசை உண்டானால் சித்தியாமை இல்லை-ததர்த்தமாக அர்த்திப்போம் -என்று சரீரத்தை ஒறுத்து தபஸை பண்ண-இவன் நினைவின் படியே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் படிகளை அடைய சிருஷ்டித்துக் காட்டி அனுபவிப்பித்து-உனக்கு வேண்டுவது என் என்று கேட்டு அருள கூடப் போந்து இப்படி தேவரை அனுபவிக்கும் அத்தனை -என்ன நீ தபஸ் பண்ணுகிற போது விஷய விதுரனாய்-அன்ன பாநாதிகளையும் கழித்து உடம்பையும் நாரும் நரம்புமாய் ஆக்கிக் கொடு போந்தாய் இங்கே இருந்து நெகிழ்ந்த போகங்களையும் கழித்து வா என்று அவன் கருத்து அறிந்து அருளிச் செய்தால் போலே என் கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் – இவ்வர்த்தம் சாப்தம் அன்றிக்கே இருக்க இவருக்கு இது கருத்தாக சொல்லுகிறது பிரகரண பலத்தாலும்-அர்த்த க்ரமத்தாலும்-நாசமான பாசம் -என்றும் போந்தேன் -என்றும் சொல்லுகிற இவருக்கு இது கருத்தாக வேணும் இறே) 5
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக்கண்ட மா மறையாளன் தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமை யிலத்த விங்கு ஒழிந்து போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும் ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-5
பதவுரை Show / Hide
மா கம், Maa Kam - பரமாகாசமெனப் படுகிற பரமபதத்திலுள்ளாரும் (- (ஆணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–;) (எனக்கும் ஆகவேண்டும் என்று அடி இணை அடைந்தேன்–.))
மா நிலம், Maa Nilam - விசாலமான இப்பூமண்டலத்திலுள்ளாரும்
முழுதும், Muzhudhum - மற்றுமுள்ள சராசரங்களடங்கலும்
வந்து இறைஞ்சும், Vandu Irainchum - வந்து வணங்கப்பெற்ற
மலர் அடி, Malar Adi - (உனது) திருவடித் தாமரைகளை
கண்ட, Kanda - ஸாக்ஷாத்கரித்த
மா மறையாளன், Maa Maraiyalan - (கோவிந்தஸ்வாமி யென்னும்) மஹாவைதிக ப்ராம்மணனொருவனைக்குறித்து
அந்த, Andha - ‘அப்பா!,
நீ, Nee - நீ
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில், Thokai Maa Mayil Annavar Inbam Thutrilamaigalil - பெண்டிர்களாலுண்டாகும் விஷய போகஸுகங்களை அநுபவியாமையால்
இங்கு ஒழிந்து, Ingu Ozhindhu - (சில காலம்) இவ்விபூதியிலேயிருந்து
போகம் எய்தி, Pogam Eydhi - விஷய போகங்களை யநுபவித்து
பின்னும், Pinnum - அதன் பிறகு
நம் இடைக்கே போதுவாய், Nam Idaikkee Podhuvai - நம்மிடம் வந்து சேரக்கடவாய்’
என்ற, Endra - என்றருளிச்செய்த
பொன் அருள், Pon Arul - சிறந்த கிருபையானது