திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1423 | பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி கருத்து அறிந்து அவனுடைய கார்யம் செய்தாப் போலே என் கருத்து அறிந்து என்னுடைய அபிமதம் செய்ய வேணும் என்றார் -கீழ் – ஸ்ரீ மார்கண்டேயன் மிருத்யு பய பீதனாய் சரணம் புக அவனுக்கு மிருத்யுவை நிரசித்து அந்த பய நிவ்ருதியை பண்ணிக் கொடுத்த அளவன்றிக்கே ஒரு காலமும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றை அவனுக்குப் பண்ணிக் கொடுத்தால் போலே என் சம்சார பயத்தை பரிக்ரஹித்து உன் திருவடிகளை நான் பிரியாத படியான பேற்றை பண்ணித் தந்து அது நான் அர்த்திக்க இரப்புக்குக் கார்யம் செய்ததாய் காலன் கொண்டு மோதிரம் இடுமா போலே பண்ணப் பெற ஒண்ணாது என் ஸ்வரூப அநு ரூபமான பேறாகிறது-நீ தரப் பெறுமது -அது வேணும் என்கிறார்) 6 | மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6 | பதவுரை Show / Hideமன்னு, Mannu - நிலைபெற்ற (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–;) (அடி இணை அடைந்தேன்–.)) நால் மறை மா முனி பெற்ற மைந்தனை, Naal Marai Maa Muni Petra Maindhanai - நான்கு வேதங்களையும் ஓதியுணர்ந்த சிறந்த ம்ருகண்டு முனிவன் பெற்றகுமாரனாகிய மார்க்கண்டேயனை, மதியாத வெம் கூற்றம் தன்னை அஞ்சி நின் சரண் என, Madhiyadha Vem Kootram Thannai Anji Nin Saran Ena - ஒருவரையும் லக்ஷரியஞ் செய்யாத கொடிய யமனுக்குப் பயந்து ‘உனது அடைக்கலப் பொருளாவேன் யான்’ என்று சொல்லி அவன் உன்னைச் சரணமடைந்தபோது சரண் ஆய், Saran Aay - (அவனுக்கு நீ) ரக்ஷகனாகி தகவு இல் காலனை உக முனிந்து, Thagavu Il Kaalanai Uga Munindhu - இரக்கமில்லாத யமனை வலியொழியும்படி கோபித்து ஒழியா, Ozhia - அவ்வளவோடு விட்டிடாமல் பின்னை, Pinnai - அதற்குமேலே என்றும் நின்திரு அடி பிரியா வண்ணம் எண்ணிய, Endrum Nindhira Adi Priya Vannam Enniya - எந்நாளும் (அம்முனிகுமாரனை) உன்திருவடிகளை விட்டுப் பிரியாமலிருக்கும்படி திருவுள்ளம் பற்றிய பேர் அருள் –, Per Arul - (உனது) சிறந்த திருவருளானது எனக்கும் அன்னது ஆகும், Enakkum Annadhu Aagum - என் விஷயத்திலும் அப்படி உண்டாகவேணும் என்று, Endru - என்று நினைத்து |