திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1424 | பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஷயீ காரத்தை சொல்லி கைங்கர்யத்தை சொல்லி அதுக்கு விரோதியாய் வருமதில் இந்த்ரிய வஸ்யதையைத் தவிர்த்து தர வேண்டுமேன்று சொல்லி அதுக்கடியான பாபமடியாக வந்த யம வஸ்யதையை பரிஹரிக்க வேணும் என்று சொல்லி அதுக்கடியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று சொல்லி கருத்து அறிந்து செய்யும் அளவு அன்றிக்கே உன் பரிவாலே செய்ய வேணும் என்று நின்றது -கீழ் – இதுக்கு அவ்வருகு அபேஷிக்கலாவது இல்லாமையாலே-மேலில் பாட்டுக்களுக்கு உதயம் இல்லை ஆனால் மேல் செய்கிறது என் என்னில் ஆழ்வீர்-சேஷியும் சேஷ பூதனும் ஆனால் சேஷி செய்தபடி கண்டு தத்தச்ய சத்ருசம் பவேத் -என்று சேஷ பூதன் இருக்கும் அத்தனை அல்லது இத்தனை த்வரிக்க கடவது அல்ல காணும் -என்ன தன்னைப் பார்த்தால் தன் சரீர அவசானத்தில் தான் பேறு உண்டோ உன் சர்வ சக்தித்வத்தாலே த்வரிக்கிறேன் இத்தனை அன்றோ அவனுடைய போக்யதை போலே-சர்வ சக்தித்வமும் த்வரிப்பிக்கும் இறே சாந்தீபிநீ புத்ரனை கடல் கொள்ள மீட்டுக் கொடுத்த அகடிதகட நா சாமர்த்த்யத்தையும் விஞ்சி இருப்பது ஓன்று இறே சம்சார ஆர்ணவத்திலே அகப்பட்டு நோவுபடுகிற என்னையும் மீட்டு உன் திருவடிகளை தருகை யாவது தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தாலே அத்தை செய்து அருள வேணும் -என்கிறார்) 7 | ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-7 | பதவுரை Show / Hideஓது, Othu - ஓதியுணர்தற்கு உரிய (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–;) (வந்து உன் அடி இணை அடைந்தேன்–.)) வாய்மையும், Vaimaiyum - ஸத்யவசநமான வேதத்தையும் உவனியம் பிறப்பும், Uvaniyam Pirappum - (அதனை ஓதுதற்கு அதிகார முண்டாம்படி) உபநயனஞ் செய்தலால் வரும் (இரண்டாவது) பிறப்பையும் முன், Mun - முன்பு உனக்கு தந்த, Unakku Thanda - உனக்கு அளித்தவனும் கோது இல் வாய்மையினால், Kothu Il Vaimaiyinal - (சாபாநுக்ரஹ சக்தியினால்) பழுதுபடுதலில்லாத மெய்ம் மொழிகளையுடையவனுமான அந்தணன் ஒருவன், Andhanan Oruvan - (ஸாந்தீபிநியென்னும்) ஒரு பிராமணன் காதல் என் மகன் புகல் இடம் காணேன், Kaadhal En Magan Pugal Idam Kaanen - ‘(எனது) அன்புக்கு இடமான புத்திரன் சென்ற இடத்தை அறியேன்; கண்டு நீ எனக்கு தருவாய் என்று, Kandu Nee Enakku Taruvay Endru - நீ (அவனிருக்கின்ற இடத்தை) நாடி யுணர்ந்து அந்த மகனை எனக்குக் கொடுக்கவேணும்’ என்று உனை வேண்டிய, Unai Vendiya - உன்னைப் பிரார்த்தித்த குறை, Kurai - அவனது வேண்டுகோளை முடித்து, Mudiththu - நீ தலைக்கட்டி அவன் சிறுவனை கொடுத்தாய், Avan Siruvanai Koduththay - அவன் மகனை (அவனுக்குக்) கொணர்ந்து கொடுத்தருளினாய்; ஆதலால், Adhalal - (இங்ஙனம் செயற்கரிய செயல் செய்து அன்பர் குறையைத் தீர்த்து அவர் வேண்டியதை வேண்டியபடி தந்தருள்பவன் நீ) ஆகையால் |