திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1428 | பெரிய திருமொழி || 1 | கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்
பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே –5-9-1 | பதவுரை Show / Hideஐக இலங்கு அழி சங்கன், Aika Ilangu Azhi Sangan - திருக்கையிலே விளங்குகின்ற திருவாழி திருச்சங்கையுடையவனும் கரு முகில் திரு நிறத்தன், Karum Mukil Thiru Niraththan - காளமேகம்போன்ற திருநிறத்தை யுடையவனும் பொய் இலன், Poi Ilan - (சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ள வைலக்ஷண்யங்களில்) பொய்யில்லாதவனும் மெய்யன், Meiyyan - (அந்த வைலக்ஷண்யங்களைத் தன்னடியார்கட்கு) மெய்யே காட்டிக் கொடுப்பவனும் தன் தாள் அடைவர் ஏல் அடிமை ஆக்கும், Than Thaal Adaivar Ael Adimai Aakkum - (யாராவது) தன் திருவடிகளைப் பணிவாராகில் (அவர்களை) நித்ய கைங்கரிய நிஷ்டராக ஆக்கிக் கொள்பவனும், அலர் கமலம் ஓங்கு செய், Alar Kamalam Ongu Sei - மலர்ந்த தாமரைகள் உயர்ந்திருக்கப்பெற்ற கழனிகளையும் செறி பொழில், Serri Pozhil - அடர்ந்த சோலைகளையும் உடைத்தான தென் திருப்பேர், Then Thiruppaer - தென்திருப்பேர் நகரில் பை அரசு அணையான், Pai Arasu Anaithyaan - பரந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனமான பெருமானுடையனுமான பெருமானுடைய நாமம் நான் பரவி உய்ந்த ஆறு ஏ, Naamam Naan Paravi Uyndha Aaru Ae - திருநாமங்களை நான் சொல்லி உஜ்ஜீவித்தபடி என்னே!. |