திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1429 | பெரிய திருமொழி || 2 | வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த வெந்தை
திங்கள் மா முகிலணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே –5-9-2 | பதவுரை Show / Hideவங்கம் ஆர் கடல்கள் ஏழும், Vangam Aar Kadalgal Ezhum - மரக்கலங்கள் நிறைந்திருக்கப்பெற்ற ஸப்த ஸாகரங்களும் மலையும், Malaiyum - குலபர்வதங்களும் வானகமும், Vaanagamum - ஆகாசமும் மற்றும், Mattrum - அதற்குமேலே அம் கண் மா ஞாலம், Am Kan Maa Nyaalam - அழகிய இடமுடைத்தான பரந்தபூமியும் (ஆகிய எல்லாம், Ellam - எல்லாவற்றையும் அமுது செய்து, Amuthu Seidhu - (பிரளயகாலத்தில்) விழுங்கி உமிழ்ந்த, Umizhndha - பிறகு வெளிப்படுத்தின எந்தை, Endhai - ஸ்வாமியும் திங்கள் மா முகில் அணவு, Thingal Maa Mukil Anavu - சந்திர மண்டலத்தையும் மேக மண்டலத்தையும் அளாவியிருக்கிற செறி பொழில், Serri Pozhil - நெருங்கிய சோலைகளையுடைத்தான தென் திருப்பேர், Then Thiruppaer - தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிற எங்கள் மால், Engal Maal - எம்பெருமானுமாகிய இறைவன், Iraivan - ஸர்வேச்வரனுடைய நாமம் ஏந்தி, Naamam Aendhi - திருநாமங்களைத் துதித்து நான் உய்ந்த ஆறு ஏ, Naan Uyndha Aaru Ae - நான் வாழ்ந்தவிதம் என்னே!. |