திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1431 | பெரிய திருமொழி || 4 | ஊனமர் தலை யொன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை யீந்தான்
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர்
வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே –5-9-4 | பதவுரை Show / Hideஊன் அமர் தலை ஒன்று, Oon Amar Thalai Ondru - மாம்ஸம் நிறைந்ததொரு பிரமகபாலத்தை (- (நான் வாழ்த்தி உய்ந்த ஆறு ஏ–.)) ஏந்தி, Aendi - கையில் தரித்துக்கொண்டு உலகு எல்லாம், Ulaku Ellam - எல்லாலோகங்களிலும் திரியும், Thiriyum - (பிச்சையெடுத்துத்) திரிந்துகொண்டிருந்த ஈசன், Eesan - ருத்ரனானவன் ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன, Ein Amar Saapam Neekkaai Enna - ‘தண்மையை விளைவிப்பதான சாபத்தை நீக்கியருள்’ என்று பிரார்த்திக்க ஒண் புனலை, On Punai - அழகிய ஸ்வேதஜலத்தை ஈந்தரன், Eendharan - கொடுத் (து அந்த சாபத்தைத் தீர்த்) தவனும். தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த, Then Amar Pozhilgal Soozhntha - வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டதும் செறி வயல், Serri Vayal - நெருங்கின கழனிகளையுடையதுமான தென் திருப்பேர், Then Thiruppaer - தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிற வானவர் தலைவன், Vaanavar Thalaivan - தேவாதிதேவனுமான பெருமானுடைய நாமம், Naamam - திருநாமங்களை |