திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1432 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1432பெரிய திருமொழி || 5
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத் தானை நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே –5-9-5
பதவுரை Show / Hide
முன், Mun - முன்பொருகால்
வானோர், Vaanor - தேவதைகள்
வக்கரன் வாய் கீண்ட மாயனே என்று, Vakkaran Vaai Keenda Maayane Enru - ‘தந்தவக்ரனடைய வாயைக் கிழித்துப் போட்ட மாயவனே’ என்று (துதித்துக்கொண்டு)
புக்கு, Pukku - வந்து சேர்ந்து
அரண் தந்தருளாய் என்ன, Aran Thandharulai Enna - ‘(எங்களுக்கு) ரக்ஷை கொடுத்தருளவேணும்’ என்று பிரார்த்திக்க
பொன் ஆகத்தானை, Pon Aagaththanai - இரணியாசுரனை,
அரி உருவம் ஆகி, Ari Uruvam Aagi - நரஸிம்ஹரூபியாகி
நக்கு கிளர்ந்து நகம் இடந்து உகந்த, Nakku Kilarndhu Nakham Idandhu Ugantha - சிரித்து வளர்ச்சியடைந்து நகங்களினால் கிழித்துப்போட்டு திருவுள்ளம் மகிழ்ந்தவனும்
சக்கரம் செல்வன், Chakkaram Selvan - திருவாழியாலே அழகு பெற்றவனும்இ
தென் பேர் தலைவன், Then Per Thalaivan - தென் திருப்பேர் நகரிலெழுந்தருளி யிருப்பவனுமான பெருமானுடைய
தாள் அடைந்து உய்ந்தேன், Thaal Adaindhu Uyndhen - திருவடிகளை ஆச்ரயித்து உஜ்ஜீவிக்கப்பெற்றேன்.