திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1433 | பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய அவ் ஊருக்கு கணையம் போலே இருக்கிற தோள்களைத் துணித்தான் ஆய்த்து) 6 | விலங்கலால் கடலடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புய்ம் துணிந்தான்
நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே –5-9-6 | பதவுரை Show / Hideவிளங்கு இழை பொருட்டு, Vilangu Izhai Porutthu - விளங்குகின்ற ஆபரணங்களை அணியத்தகுந்தவளான பிராட்டிக்காக (- (இலங்காபுரியிற் புகுந்து) (எழுந்தருளியிருக்கப்பெற்ற),-) விலங்கலால், Vilankalaal - மலைகளினால் கடல், Kadal - தெற்குஸமுத்ரத்தை அடைத்து, Adaiththu - அணை செய்து இலங்கை மா நகர்க்கு இறைவன், Ilangai Maa Nagarkku Iraivan - (அந்த) அலங்கையென்னும் பெரியபட்டணத்திற்குத் தலைவனான இராவணனுடைய இருபது புயம், Irupadhu Puyam - இருபதுதோள்களை வில்லால், Villaal - (தனது) சார்ங்கத்தினால் துணித்தான், Thuniththaan - அறுத்தொழிந்த பெருமான் நலம் கொள், Nalam Kol - நல்லொழுக்கமுடையராய் நால் மறை வல்லார்கள், Naal Marai Vallarhal - நான்கு வேதங்களிலும் வல்லவர்களான அந்தணர்கள் ஓத்து ஒலி ஏத்த, Ooththu Oli Aetha - வேதகோஷங்களைச் செய்து கொண்டிருக்க கேட்டு, Kaettu - அவ்வொலியைக் கேட்டு மலங்கு, Malangu - மீன்களானவை பாய், Paai - அஞ்சித் துள்ளயோடப் பெற்ற வயல், Vayal - கழனிகளையுடைத்தான திரு பேர், Thiru Per - திருப்பேர்நகரை மருவி நான் வாழ்ந்த ஆறு ஏ, Maruvi Naan Vazhndha Aaru Ae - அடைந்து நான் வாழ்ச்சி பெற்றவிதம் என்னே!. |