திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1435 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1435பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓர் இடைச் சேரி மாதரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய ஸ்ரீ திரு வாய்ப்பாடியிலே வஞ்சிக் கொம்பு போலே இருக்கிற வடிவை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டி உடைய ஒப்பனையோடே சேருகைக்காக ருஷபங்கள் ஏழையும் நிரசித்தான்) 8
அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள் கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே –5-9-8
பதவுரை Show / Hide
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய, Am Pon Ar Ulagam Ezhum Ariya - அழகிய பொன்போற் சிறந்த ஏழுலங்களும் அறியும்படியாக
ஆய்ப்பாடி தன்னுள், Aaypaadi Thannul - திருவாய்ப்பாடியிலே
கொம்பு அன்னார் பின்னை, Kombu Annar Pinnai - வஞ்சிக் கொம்புபோன்ற நப்பின்னைப் பிராட்டியினுடைய
கோலம், Kolam - திருமேனியை
கூடுதற்கு, Kooduthar - அணைவதற்காக
ஏறு, Eru - எருதுகளை
கொன்றான், Konraan - கொன்றொழிந்தவனும்
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த, Sem Pon Aar Madiyilgal Soozhntha - செவ்விய பொன்போல் அழகிய திருமதிள்களாலே சூழப்பட்ட
தென் திருப் பேருள், Then Thirup Perul - தென் திருப்பேர் நகரில்
மேவும், Maevum - பொருந்திவாழ்பவனுமான
எம்பிரான், Embiraan - எம்பெருமானுடைய
நாமம், Naamam - திருநாமங்களை
நாளும், Naalum - நாள்தோறும்
ஏத்தி, Aethi - ஸங்கீர்த்தநம்பண்ணி
நான் உய்ந்த ஆறு ஏ, Naan Uyndha Aaru Ae - நான் உஜ்ஜீவித்த விதம் என்னே..