திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1436 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1436பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகளிலும் காட்டில் கை வந்து இருக்கிற பிராமணர் ஆனவர்கள் சிருஷ்டி காலம் தொடங்கி ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கக் குடி ஏறி ஜீவித்துப் போருகிறவர்கள் ஆய்த்து – சீலகுண பிரசுரராய் மிக்க தபசை உடையராய் இருக்கிற பிராமணர் ஹிருதயத்தை தனக்காக்கிக் கொண்டு இருக்கிறவன் என்னுடைய ஹிருதயஸ்தன் ஆனான்) 9
நால் வகைவேதம் ஐந்து வேள்வி யாறங்கம் வல்லார் மேலை வானவரில் மிக்க வேதியர் ஆதி காலம் சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலொடும் வாழ்வார் சீல மா தவத்தர் சிந்தையாளி யென் சிந்தையானே –5-9-9
பதவுரை Show / Hide
நால் வகை வேதம், Naal Vagai Vedham - நான்கு வேதங்களிலும்
ஆறு அங்கம், Aaru Angam - ஆறு வேதாங்கங்களிலும்
ஐந்து வேள்வி, Ainthu Velvi - பஞ்சமஹாயஜ்ஞங்களிலும்
வல்லார், Vallaar - ஸமர்த்தர்களாய்.
மேலை வானவரில் மிக்க தேவதியர், Melaivaanavaril Mikka Deivathiyar - மேலுலகத்திலுள்ள தேவர்களிற் காட்டிலும் மேம்பட்ட பிராமணோத்தமராய்,
ஆதி காலம், Aadhi Kaalam - வெகுகாலந்தொடங்கி
சேல் உகள் வயல் திருப்பேர், Seyl Ugal Vayal Thiruppaer - மீன்கள் துள்ளுங் கழனிகளையுடைய திருப்பேர் நகரில்
செம் கண் மாலோடும், Sem Kan Maalodum - செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரனோடுகூட
வாழ்வார், Vaazhvaar - நித்யவாஸம் பண்ணுமவராய்
சீலம் மா தவத்தர், Seelam Maa Thavaththar - நற்குணமும் நல்லொழுக்கமுமுடையரான பிராமணருடைய
சிந்தை ஆளி, Sindhai Aali - உள்ளத்தை (த்தனக்கு இருப்பிடமாகக்கொண்டு) ஆள்கின்ற எம்பெருமான்
என் சிந்தையான், En Sindhaiyaan - என்னுடைய ஹ்ருதயத்தில் நித்யவாஸம் பண்ணுமவன்.