திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1437 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1437பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்) 10
வண்டறை பொழில் திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே –5-9-10
பதவுரை Show / Hide
வண்டு அறை பொழில், Vandu Arai Pozhil - வண்டுகள் ஒலிசெய்யப் பெற்ற சோலைகளையுடைய
திருப்பேர், Thirupper - திருப்பேர் நகரில்
வரி அரவு அணையில், Vari Aravu Anaiyil - வரிகளையுடைய ஆதிசேஷனாகிற படுக்கையிலே
பள்ளி கொண்டு, Palli Kondo - சயனித்துக்கொண்டு
உறைகின்ற மாலை, Uraikindra Maalai - நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரனைக் குறித்து,
கொடி மதிள் மாடம் மங்கை, Kodi Mathil Maadam Mangai - கொடி கள் விளங்கப்பெற்ற மதிள்களையும் மாளிகைகளையு முடைத்தான திருமங்கையில் அவதரித்தவராய்
திண்திறல் தோற் கலியன், Thinthiral Thor Kalayan - மிக்க வலிமைகொண்ட திருத்தோள்களையுடையரான ஆழ்வார்
செம் சொலால், Sem Solal - அழகிய சொற்களைக் கொண்டு
மொழிந்த, Mozhinda - அருளிச்செய்த
மாலை இவை, Maali Ivai - இச்சொல்மாலையை
கொண்டு, Kondo - அதிகரித்து
பாடி ஆட, Paadi Aada - பாடவுமாடவும் பெற்றால்
நீள் விசும்பு கூடுவர், Neel Visumbu Kooduvar - பரமபதம் சென்று சேரப்பெறுவர்கள்,