திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1438 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1438பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்தராத்மதயா நின்று ரஷகனாம் படி சொல்லி- கண்ணுக்கு இலக்காம்படி வந்து அவதரித்து ரஷகனாம்படி சொல்லி ஒதுங்குவார் அளவு பட்டு இத் தோள் நிழலே மிக்கு இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே) 1
தீதறு நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய் மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான் தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர் நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-1
பதவுரை Show / Hide
தீது அது நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவை ஆய், Theethu Adhu Nilathodu Eri Kaalinodu Neer Kezhu Visumbum Avai Aayi - குற்றமற்ற (சிறந்த) பூமியும் அக்நியும் வாயுவும் ஜலமும் சிறந்த ஆகாசமும் ஆகிய பஞ்சபூதங்களுக்கு அந்தராத்மாவாயிருப்பவனும் (- (பின்னையும் ஸமயம் பார்த்து))
மாசு அறு மனத்தினொடு, Maasu Aru Manathinodu - குற்றமற்ற மநஸ்ஸும்
உறக்கமொடு, Urakkamodu - உறக்கமும்
இறக்கை அவை ஆய, Irakkai Avai Aayi - மரணமும் ஆகிய இவற்றுக்கு நிர்வாஹகனும்
பெருமான், Perumaan - பெருமை தங்கியவனும்
தாய், Thaai - தாயாகிய யசோதைப்பிராட்டி
செற, Sera - சீறித் தாம்பெடுக்க
உளைந்து, Ulaindhu - அதற்கு நடுங்கிக்கிடந்தும்
தயிர் உண்டு, Thayir Undu - தயிரை (த்திருடி) உட்கொண்டு
குடம் ஆடு, Kudam Aadu - குடக்கூத்தாடினவனும்
தடம் மார்வர், Thadam Marvar - விசாலமான திருமார்வையுடையவனும்
தகை சேர், Thakai Ser - அருள் பொருந்தியவனுமான
நாதன், Nadhan - ஸ்வாமி
உறைகின்ற நகர், Uraikindra Nagar - நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருப்பதியாகிய
நந்திபுர விண்ணகரம், Nandhipura Vinnakaram - நந்திபுர விண்ணகரத்தை
மனமே நண்ணு, Maname Nannu - நெஞ்சே! அடைந்திடுவாயாக,