திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1439 | பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 2 | உய்யும் வகை யுண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள்
மெய்யின் அளவே யமுது செய்ய வல ஐயன் வான் மேவு நகர் தான்
மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-2 | பதவுரை Show / Hideமனமே!, Maname - நெஞ்சே! (- (சொல்லுகிற காரியமேதென்னில், சொல்லுகிறேன், கேள்;-) (நந்திபுரவிண்ணகரம், நண்ணு)) சொன செய்யில், Sona Seyyil - நான் சொல்வதைச் செய்தால் உய்யும் வகை உண்டு, Uyum Vagai Undu - உஜ்ஜீவிக்கவுபாயமுண்டு முன நாள், Muna Naal - முன்பொருகால் உலகு ஏழும் ஒழியாமை, Ulaku Ezham Ozhiyamai - ஸப்த லோகங்களில் ஒன்றுந் தவறாதபடி மெய்யின் அளவே, Meiyin Alave - (அவ்வுலகமெல்லாம் தனது சிறிய) திருமேனியளவாக (ஒடுங்கும்படி) அமுத செய்ய வல, Amutha Seyya Vala - அமுது செய்வதில் ஸமர்த்தனாயிருந்த ஐயன் அவன் தான், Aiyan Avan Thaan - அப்பெருமான் மேவும் நகர், Mevum Nagar - பொருந்திவாழும் திவ்ய தேசமாயிருப்பதும் ஐமய வரி வண்டு, Aimaya Vari Vandu - கரிய அழகிய வண்டுகள் கிளையோடு, Kilayodu - தமது பந்துவர்க்கங்களோடு கூட மது உண்டு மலர் கிண்டி, Madhu Undu Malar Kindi - தேனைப்பருகி பூக்களைக்கோதி அதன் மேல், Adhan Mel - அதன் பிறகு நைவளம் நவிற்று பொழில், Naivalam Navitru Pozhil - ராக விசேஷங்களைப் பாடப்பெற்ற சோலைகளை யுடையதுமான |