திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1440 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1440பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏதேனும் தசையிலும் விச்வச நீயானாய் இருக்கிறவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 3
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை எழும் ஒழியாமை முன நாள் தம் பொன் வயிராரளவும் உண்டவை உமிழ்ந்த தடமார்வர் தகை சேர் வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வருதும்பி மணி கங்குல் வயல் சூழ் நம்பன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-3
பதவுரை Show / Hide
முளநாள் உம்பர் உலகு ஏழும் கடல் ஏழும் மலை ஏழும் ஒழியாமை, Mulanai Umbar Ulaku Ezham Kadal Ezham Malai Ezham Ozhiyamai - முன்பொருகால் மேலுலகங்களேழையும் ஸப்தஸாகரங்களையும் ஸப்த குலபர்வதங்களையும் ஒன்றும் விடாமல் (- (நந்திபுர விண்ணகரம், மனமே! நண்ணு–.))
தம் பொன் வயிறு ஆரளவும், Tham Pon Vayiru Aarlavum - தனது திருவயிறு நிறையுமளவும்
உண்டு, Undu - அமுது செய்து
அவை உமிழ்ந்த, Avai Umizhndha - (பிறகு ஸ்ருஷ்டி முகத்தால்) வெளிப்படுத்தினவனும்
தடமார்வர், Thadamarvar - விசாலமான திருமார்பை யுடையவனும்
தகை சேர், Thakai Ser - பெருமை பொருந்தியவனும்
நம்பன், Namban - விச்வாஸயோக்யனுமான எம்பெருமான்
உறைகின்ற நகர், Uraikindra Nagar - நித்யவாஸம் பண்ணுமிடமானதும்,-
வம்பு மலர்கின்ற பொழில், Vambu Malarkindra Pozhil - புதிது புதிதாக மலர்ந்து கொண்டேயிருக்கின்ற (பூக்களையுடைய) சோலைகளிலே
பை பொன் வரு தும்பி மணி, Pai Pon Varu Thumbi Mani - பசும்பொன் போன்ற நிறங்கொண்டு திரிகின்ற தும்பிகளினால்; அழகு பெற்றதும்
கங்குல் வயல் சூழ், Gangul Vayal Soozh - (கருவடைந்ததனால்) இருண்டிருக்கின்ற கழனிகளால் சூழப்பட்டதுமான