திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1441 | பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சிறகை உடைத்தாய் இருக்கிற மயில்கள் குயில்கள் இவை நெருங்க அத்தாலே பூக்கள் உதிர வண்டுகள் ஆளத்தி வைக்க –பொழிலிலே மேகங்கள் வந்து சஞ்சரியா நின்றுள்ள தேசம்) 4 | பிறையின் ஒளி எயிறு இலக முறுகி யெதிர் பொருதுமென வந்த வசுரர்
இறைகளவை நெறு நெறு என வெறியவவர் வயிறு அழல நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்களுக வளி முரல அடி கொள் நெடுமா
நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-4 | பதவுரை Show / Hideபிறையின் ஒளி எயிறு இலகமுறுதி, Piraiyin Oli Eiyiru Ilakamuruthi - பாலசந்திரன் போன்று ஒளிபெற்ற கோரைப் பற்கள் விளங்க மேலிட்டுவந்து (- (நந்திபுரவிண்ணகரம், மனமே! நண்ணு–.)) எதிர் பொருதும் என வந்த அசுரர், Edhir Porudhum En Vanda Asurar - எதிரிட்டுச் சண்டைபோடுவோ மென்று வந்த அஸுரர்களுடைய இறைகள் அவை, Iraigal Avai - சரீரங்களானவை நெறு நெறு என, Neru Neru En - நெறுநெறு வென்று முறிந்தொழிய வெறிய அவர், Veriya Avar - வெறுங்கையரான அவ்வசுரர்கள் வயிறு அழல நின்ற, Vayiru Azhala Nindra - வயிறெரியும்படி (வெற்றி பெற்று) நின்ற பெருமான், Perumaan - ஸர்வேச்வரன் (எழுந்தருளியிருக்கப்பெற்றதாய்,) சிறைகொள் மயில் குயில் பயில, Siraikol Mayil Kuyil Payil - (சிறந்த) சிறகுகளையுடைய மயில்களும் குயில்களும் நெருங்கிவாழப்பெற்றனவும் மலர்கள் உக, Malargal Uga - பூக்கள் (எங்கும்) சிந்தியிருக்கப்பெற்றனவும் அளி முரல, Ali Murala - வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்றனவும் அடி கொள் நெடு மா நறை செய், Adi Kol Nedumaa Narai Sei - கீழேவேரூன்றி மேலே நீண்டுள்ள மா மரங்கள் மணம் வீசப்பெற்றனவுமான பொழில் சோலைகளிலே, Pozhil Solaigalile - பொழில் சோலைகளிலே மழை தவழும், Mazhai Thavazhum - மேகங்கள் உலாவப் பெற்றதான |