திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1442 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1442பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யுத்தத்துக்கு பரிகரமான வாளும்-தர்ச நீயமான வில்லும் வளைந்த வாயை உடைத்தான திரு ஆழியும் கதையும் இவற்றை அழகிய திருக் கையிலே உடையவன் அவதாரங்கள் போலே இப்போது சந்நிதி இல்லை என்ன வேண்டாத படி நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 5
மூள வெரி சிந்தி முனி வெய்தியமர் செய்தும் என வந்த வசுரர் தோளுமவர் தாளும் முடியோடு பொடியாக நொடியாம் அளவெய்தான் வாளும் வரி வில்லும் வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான் நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-5
பதவுரை Show / Hide
மூள எரி சிந்தி, Moola Eri Sindhi - (கண்டவிடமெங்கும்) புகையும்படியாக நெருப்புகளைக் கொட்டி (- (நந்திபுரவிண்ணகரம், மனமே! நண்ணு–.))
அமர்செய்தும் என வந்த அசுரர் அவர், Amarseithum Ena Vantha Asurar Avar - ‘யுத்தம் செய்வோம்’ என்று வந்த அசுரர்களினுடைய
தோளும் தாளும் முடியோடு, Tholum Thaalum Mudiyodu - தோள்களும் கால்களும் தலைகளும்
பொடி ஆக, Podi Aaga - பொடிபொடியாம்படி
நொடி ஆம் அளவு, Nodi Aam Alavu - ஒருநொடிப் பொழுதில்
எய்தான், Eydhaan - அம்புகளைச் செலுத்தினவனும்
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான், Vaalum Vari Villum Vazh Aazhi Kadhai Sangam Ivai Am Kai Udaiyaan - நந்தகவாள், அழகியசார்ங்கம், மண்டலாகாரமான ஸுதர்சநம், கௌமோதகி, பாஞ்சஜந்யம் ஆகிய இப்பஞ்சாயுதங்களை அழகிய திருக்கையில் ஏந்தியுள்ள வனுமான பெருமான்
நாளும், Naalum - எப்போதும்
உறைகின்ற நகர், Uraikindra Nagar - எழுந்தருளியிருக்குந் திருப்பதியான