திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1443 | பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெம்மையை உடைத்தாய் நிலம் தன்னையே விறகாகப் பற்றி எரிகிற காட்டிலே உலாவினவர் அப்பிராட்டியோடே புணர்ந்து சமஸ்த கல்யாண குணாத்மகன் வர்த்திக்கிற தேசம்) 6 | தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள்
வெம்பி யெரி கானக முலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான்
கொம்புகுதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழிலார் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-6 | பதவுரை Show / Hideமுன் நாள், Mun Naal - முன்பொருகால் (- (அதனைக் கேட்டு) (நந்திபுர விண்ணகரம் மனமே! நண்ணு–.)) தாம் ஒருவர், Thaam Oruthar - லோகவிலக்ஷணராகத் திருவவதரித்த ஸ்ரீராமபிரானாகிய ஒருவர் தம்பியொடு, Thambiyodu - தம்பியான லக்ஷ்மணனும் தன் காதல் துணைவி, Than Kaadhal Thunaivi - தனது காதலே வடிவெடுத்த பத்னியான ஸீதையும் துணை ஆக, Thunai Aaga - ஸஹாயமாகக் கூடவர, வெம்பி எரி கானகம், Vembi Eri Kaanagam - தீக்ஷ்ணமாய்ப் பற்றியெரிகின்ற காட்டிலே உலாவும் அவர் தாம், Ulaavum Avar Thaam - உலாவினவர் இனிது மேவு, Inidhu Mevu - போக்யமாகப் பொருந்தி வர்த்திக்கப்பெற்ற நகர் தான், Nagar Thaan - திவ்ய தேசமாயும் குயில், Kuyil - குயில்களானவை கொம்பு, Kombu - கிளைகளில் நின்றும் குதிகொண்டு, Kudikondru - குதித்து கூவ, Koova - கூவுதல்செய்ய மயில் ஆலும், Mayil Aalum - மயில்கள் கூத்தாடப்பெற்ற, எழில் ஆர், Ezhil Aar - அழகுபொருந்திய பறவு சேர், Paravu Ser - சோலைகளை யுடையதாயும் நம்பி, Nambi - ஸகல கல்யாணகுண பூர்ணனான எம்பெருமான் உறைகின்ற நகர், Uraikindra Nagar - நித்யவாஸம் பண்ணுமிடமாயுமிருக்கிற |