திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1444 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1444பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆசூர பிரக்ருதிகள் கண்ணுக்குத் தோற்றாதபடி இருளிலே வந்த பெரு மிடுக்கனான ஸ்ரீ நந்த கோபர் பிள்ளை – பிறந்தது அங்கே ஆகில்-மீண்டும் போய் வளர்ந்தது அங்கே யாகில் – கம்ச பயத்தாலே நாலு நாள் வளர்ந்த இத்தனையும் கொண்டு அறிவு குறைய நின்றார் சொல்லுகை அன்றிக்கே அறிவில் தலை நின்ற நம் போல்வார் இங்கன் சொல்லுகிற இதுக்கு ஹேது என்-என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க – நாமே அன்று காணும்-அவதார காலத்துக்கு முன்பே அறிவுடையராய் இருப்பாரும் இப்படி சொன்னார்கள் காணும் – அயம் ச கத்யதே ப்ராஜ்ஞை-இத்யாதிகளாலே-அவர்களுக்கு முலை சுரவா நின்றது ஆகில் இவன் தான் அஞ்சா நின்றான் ஆகில் உமக்கு இவ்வாராய்ச்சி என் தான் -என்று அருளிச் செய்தார் – அந்ய பரன்-அநந்ய பரனாய் அடிமை செய்து வர்த்திக்கிற தேசம் – அதாவது நந்தி என்பான் ஒருவன் அக்காலத்தில் அங்கே அனுகூலித்து வர்த்தித்தான் போலே) 7
தந்தை மனமுந்து துயர் நந்தவிருள் வந்த விறல் நந்தன் மதலை எந்தை யிவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் மந்த முழ வோசை மழையாக வெழுகார் மயில்களாடு பொழில் சூழ் நந்தி பணி செய்த நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-7
பதவுரை Show / Hide
தந்தை, Thandai - தகப்பனாராகிய நந்தகோபருடைய (- (நந்திபுர விண்ணகரம், மனமே! நண்ணு–.))
மனம், Manam - மனத்தை
உந்து, Undhu - சோரப்பண்ணுகின்ற
துயர், Thuyar - துக்கமானது (புத்திரனில்லையேயென்கிற சோகம்)
நந்த, Nanda - தொலையும்படி
இருள் வந்த, Irul Vantha - (ஒருவர்க்குந் தெரியாதபடி மதுரையில் நின்றும்) இரவிலே (திருவாய்ப் பாடிக்கு) வந்து சேர்ந்த
விறல், Viral - பெருமிடுக்கனான
நந்தன் மதலை, Nandan Muthalai - நந்தகோபகுமாரனான கண்ணபிரான்
அமரர், Amarar - தேவர்கள்
இவன் எந்தை என்று, Ivan Endhai Endru - ‘இவனே எமக்குஸ்வாமி’ என்று சொல்லிக்கொண்டு
கந்தம் மலர் கொண்டு தொழ, Kandham Malar Kondo Thozha - மணம்மிக்க பூக்களைப் பணிமாறி ஆச்ரயிக்கும்படியாக
நின்ற, Nindra - எழுந்தருளியிருக்கிற
நகர் தான், Nagar Thaan - திவ்யதேசமாயும்,
முழவு, Muzhavu - வாத்யங்களினுடைய
மந்தம் ஓசை, Mandham Osai - மந்தமான த்வநியை
மழை ஆக, Mazhai Aaga - மேகமுழக்கமாகக் கருதி
கார், Kaar - கார்காலத்தில்
எழு, Ezhu - கிளர்கின்ற
மயில்கள், Mayilgal - மயில்கள்
ஆடு, Aadu - கூத்தாடுமிடமான
போழில், Pozhil - சோலைகளினால்
சூழ், Sool - சூழப்பெற்றதாய்
நந்தி பணிசெய்த நகர், Nandi Paniseitha Nagar - நந்தியென்னும் ஓரரசன் கைங்கரியங்கள் செய்யப் பெற்ற தலமான