திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1445 | பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியிலே பாரத வர்ஷமே உத்தேச்யம்-பண்ணின புண்யமானது-சாலில் எடுத்த நீர் போலே ஷயித்தவாறே முகம் கீழ்ப்படத் தள்ளுகிற ஸ்வர்க்கமும் ஒரு தேசம் ஆய்த்தோ – கோலின பலங்களுக்கு எல்லாம் சாதன அநுஷ்டானம் பண்ணலாம் பாரத வர்ஷத்தை ஒழிய -என்றார்கள் இறே அப்படியே பூமிப் பரப்பில் ஸ்லாக்கியமாய் இருந்துள்ள இந்த நகரத்தோடே ஒக்க கடவது இல்லை என்று தேவர்கள் புஷ்பாதி உப கரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 8 | எண்ணில் நினைவெய்தி யினியில்லை இறையென்று முனியாளர் திருவார்
பண்ணில் மலி கீதமொடு பாடியவராடலொடு கூட வெழிலார்
மண்ணிலிது போலு நகரில்லைஎன வானவர்கள் தாம் மலர்கள் தூய
நண்ணி யுறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-8 | பதவுரை Show / Hideஎண்ணில், Ennil - ஆராயுமளவில் (- (நந்திபுரவிண்ணகரம், மனமே நண்ணு–.)) நினைவு எய்தி இறை, Ninaivu Eydhi Irai - தியானத்திற்கு இலக்காகக் கூடிய ஸ்வாமி இனி இல்லை என்று, Ini Illai Endru - இவனைக் காட்டிலும் வேறொருவனில்லை யென்று (நிச்சயித்து) முனியாளர், Muniyalar - மஹாமுனிகள் திரு ஆர் பண்ணில் மலி, Thiru Aar Pannil Mali - அழகுமிக்க இசையினால் நிறைந்த கீதமொடு பாடி, Geethamodu Paadi - பாடல்களோடு கூட ஸ்துதிகள் செய்ய, அவர் ஆடலொடு கூட, Avar Aadalodu Kooda - அந்த முனிவர் (தங்கள் பாட்டுக்குச் சேரத் தாங்களே செய்கின்ற) நர்த்தனங்களுக்குத் தகுதியாக, வானவர்கள் தாம், Vaanavargal Thaam - தேவர்கள் எழில் ஆர் மண்ணில், Ezhu Aaar Mannil - இப்பூலோகத்தில் இது போலும் நகர் இல்லை என, Idhu Polum Nagar Illai Ena - இத்திருப்பதியைப் போன்ற நகரம் (எங்கும்) இல்லை’ என்று கொண்டாடி மலர்கள் தூய், Malargal Thooei - புஷ்பங்களைப் பணிமாறி நண்ணி, Nanni - ஆச்ரயித்து உறைகின்ற, Uraikindra - நித்யவாஸமும் செய்யப்பெற்ற நகர், Nagar - திவ்யதலமாகிய |