திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1446 | பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நங்கள் ஸ்ரீ பெருமான் உறையும் –ஸ்ரீ பர அவஸ்தை ஸ்ரீ நித்ய சூரிகளுக்காய் இருக்கும் ஸ்ரீ வ்யூஹம் ப்ரஹ்ம ருத்ராதிகள் பரிபவத்தைப் போக்கவாய் இருக்கும் ஸ்ரீ அவதாரங்கள் ஸ்ரீ வசுதேவர் ஸ்ரீ சக்கரவர்த்திகள் தொடக்கமான பாக்யாதிகருக்காய் இருக்கும் பிற்பாடரான நம் போல்வாருக்காய் இருக்கும் இறே உகந்து அருளின நிலங்கள் ஸ்ரீ நித்ய சூரிகளும் இங்கே வரும் போது குறைவாளராய் வர வேணும் அந்தருக்கு வைத்த சாலையில் கண்ணை மறைத்து வர வேணும் இறே) 9 | வங்க மலி பௌவமதுமா முகட்டின் உச்சி புக மிக்க பெரு நீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால்
நாங்கள் பெருமான் உறையும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-9 | பதவுரை Show / Hideமனமே, Maname - நெஞ்சமே!, (- (நந்திபுரவிண்ணகரம், நண்ணு–.)) அவனது ஆணை, Avanathu Aanai - அப்பெருமானுடைய திருவாணையை தலை சூடும் அடியார், Thalai Soodum Adiyar - சிரஸா வஹிக்கின்ற பக்தர்கள், வங்கம் மலி பௌவம் அது, Vangam Mali Pouvam Adhu - மரக்கலங்கள் நிறைந்த ஸமுத்ரமானது மா முகடின் உச்சி புக, Maa Mugadin Uchi Puga - உயர்ந்துள்ள அண்ட பித்தியினுடைய தலையளவுஞ் சென்று வியாபிக்கும்படி மிக்க, Mikka - பொங்கிக்கிளர்ந்த பெரு நீர், Peru Neer - (ஊழிப்) பெரு வெள்ளத்திலும் அங்கம் அழியார், Angam Azhiyar - சரீர நாசத்தை அடைய மாட்டார்கள்; அறிதி ஏல், Aridhi Ael - (நீ இதை) அறிவாயேல், பொங்கு புனல் உந்தும் மணி, Pongu Punal Undum Mani - பெருகாநின்ற ஜலமானது தள்ளிக்கொண்டு வருகின்ற நவமணிகளின் கங்குல் இருள் சீறும் ஒளி, Gangul Irul Seerum Oli - இரவிருளைப் போக்குகின்ற பிரகாசமானது எங்கும் உளது, Engum Ulathu - எங்கும் வியாபித்திருக்கப்பெற்றதாய் நங்கள் பெருமான் உறையும், Nangal Perumaan Uraiyum - எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமான |