திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1448 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1448பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அர்த்தித்து நின்று பெற்ற அவ்விடம் தன்னிலே நின்றே அண்டங்கள் உடன் கூட பூமிப் பரப்பை அளந்து கொண்டவனே நான் இதர விஷயங்களில் பிரவணனாய் உன் பக்கலிலே வைமுக்ய்யம் பண்ணிப் போரா நிற்கச் செய்தேயும் இவ்வளவும் வர என் சத்தை அழியாமல் நோக்கிக் கொண்டு போந்தவனே – அநாதி காலம் சத்தையை நோக்கி கொடு போந்ததின் பலம் நீயே பெற வேண்டி இருந்தாய் ஆகில் என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும் – இன்னும் இவனுக்கு சம்சார வாசனை கழிந்தது இல்லை என்று இருக்க வேண்டா எனக்கு லோக யாத்ரையில் ருசி இல்லாமையைத் திரு வுள்ளம் பற்ற வேண்டும்) 1
வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன் தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1
பதவுரை Show / Hide
அமரரும், Amararum - தேவர்களும்
தொண்டரும், Thondarum - (மற்றுமுள்ள) பக்தர்களும்
நம் பண்டை வினை கெட என்று, Nam Pandai Vinai Keda Endru - ‘நமது முன்னைத் தீவினைகளெல்லாம் தொலையவேணும்‘ என்று மநோரதித்து,
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு, Vandu Unum Naru Malar Indai Konda - வண்டுகள் மதுவுண்ணப் பெற்ற மணம் மிக்க பூக்களினாலாகிய மாலைகளை ஏந்திக்கொண்டு
அடிமேல் பணிய நின்று, Adimeel Paniya Nindru - திருவடிகளிலே விழுந்து ஸேவிக்கும்படியாக நின்று
அங்கு, Angu - அப்போதே
அண்டமொடு, Andamodu - அண்டங்களையும்
அகல் இடம், Akal Idam - பரந்த பூமியையும்
அளந்தவனே, Alandavaney - (திருவடிகளால் வியாபித்து) அளந்து கொண்டவனே!
ஆண்டாய், Aandai - அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!
விண்ணகர் மேயவனே, Vinnagar Meyavaney - திருவிண்ணகரில் நித்ய வாஸம் செய்பவனே!
உன்னை காண்பது ஓர் அருள், Unnai Kaanbathu Oru Arul - உன்னை நான் ஸேவிக்கும்படியான க்ருபையை
எனக்கு அருளுதி ஏல், Enakku Aruluthi Ael - என் விஷயத்தில் செய்தருள்வாயாகில்
மனை வாழ்க்கையை, Manai Vazhkkaiyai - (இனி) ஸம்ஸார வாழ்க்கையை
வேண்டேன், Vaendain - விரும்பமாட்டேன்